சிரிய இத்லிப் நகர வான் தாக்குதலில் 21 பேர் பலி

சிரிய கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு இத்லிப் நகரில் உள்ள வர்த்தக வலயம் மற்றும் சந்தைப் பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதல்களில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர்.

ரஷ்யா மற்றும் அரச போர் விமானங்கள் இந்த தாக்குதல்களை நடத்தியதாக கண்காணிப்புக் குழு ஒன்று குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் துருக்கி இடையே இந்த மாத ஆரம்பத்தில் எட்டப்பட்ட யுத்த நிறுத்தம் ஒன்றை மீறுவதாக இந்தத் தாக்குதல் உள்ளது.

இத்லிப் என்பது இதே பெயரைக் கொண்ட வடமேற்கு மாகாணத்தின் தலைநகர் என்பதோடு கிளர்ச்சியாளர்களின் கடைசி கோட்டையாகும். பரபரப்பான அல் ஹால் சந்தை மற்றும் இத்லிப் நகரின் வர்த்தக வலயங்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

வர்த்தக வலயத்தில் உள்ள பல கார் வண்டிகள் எரிந்து சாம்பலாகி இருப்பதோடு அவைகளில் இருந்த ஓட்டுநர்களும் உயிரிழந்திருப்பதாக ஏ.எப்.பி செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...