ஜெயிலானி தேசிய பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் | தினகரன்


ஜெயிலானி தேசிய பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள்

பலாங்கொடை இ/ஜெயிலானி தேசிய பாடசாலையின் 2020 ஆம் ஆண்டின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் 'விளையாட்டு வசந்தம்' ஆரம்ப தின நிகழ்வுகள் குறிப்பாக அனைவரையும் கவர்ந்த மரதனோட்டப் போட்டி யும் அண்மையில் நடைபெற்றது.

 பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.றிசாத் தலைமையில் நடைபெற்ற ஆரம்பதின நிகழ்வுகள் உட்பட மரதனோட்ட போட்டியில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற (1)அபாம் அனீஸ் (2) அம்ஜத் கைசர் (3) முர்ஷித் முசம்மில் ஆகியோருடன் பாடசாலை அதிபரையும் படங்களில் காணலாம்.

இல்ல விளை யாட்டுப் போட்டியின் ஆரம்ப தின விழா ஆரம்பமானதுடன் அதனையடுத்து நடைபெற்ற மரதனோட்டப் போட்டியில் மாணவ வீரர்களுடன் பாடசாலை நிர்வாகத்தினர் ஆசிரிய மாணவர்கள் பழைய மாணவர்கள் பெற்றார்கள் அபிமானிகள் அனைவரும் உற்சாகத்துடன் பங்களிப்பை வழங்கினர். இவ்விழாவின் ஆரம்பம் முதல் அனைத்து நிகழ்வுகளும் சிறந்த ஆளுமை மிக்க தலைமை த்துவத்தின் ஆலோசனைகளுக்கிணங்க வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறித்து பாடசாலை நிர்வாகத்துக்கு பாராட்டுக்களை தெரிவித் துள்ளனர்.


Add new comment

Or log in with...