மரதன் ஓட்டப் போட்டியில் மினா இல்ல மாணவர்கள் வெற்றி | தினகரன்


மரதன் ஓட்டப் போட்டியில் மினா இல்ல மாணவர்கள் வெற்றி

அக்கரைப்பற்று, அஸ்- - ஸிராஜ் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுவிழாவையொட்டி நடாத்தப்பட்ட மரதன் ஓட்டப் போட்டியில் மினா இல்ல மாணவர்கள் முதல் மூன்று நிலைகளைப் பெற்று வெற்றியீட்டினர். அறபா, மினா, ஸம்ஸம் இல்ல மாணவர்கள் பங்கேற்ற மரதன் ஓட்டப் போட்டியில் மினா இல்ல மாணவர்களான எம்.கே.அஹமட் முதலாமிடத்தையும், எஸ்.சிமார் இரண்டாமிடத்தையும், ஜே.எம்.சிமார் மூன்றாமிடத்தையும் பெற்று வெற்றியீட்டியதாக விளையாட்டு குழுச் செயலாளர் ஆசிரியர்எம்.எம்.எம்.ஹாறுன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பட்டினப் பள்ளிவாயலுக்கு முன்னால் ஆரம்பமான மரதன் ஓட்டப்போட்டியை, அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலய அதிபர் ஏ.எல்.இக்பால் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பம் செய்து வைத்தார். பட்டினப் பள்ளிவாயல் முன்றலில் ஆரம்பமான மரதன் போட்டி, அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதி, வெள்ளப்பாதுகாப்பு வீதி, அக்கரைப்பற்று தேசியபாடசாலை முன்றல், அம்பாரை வீதி, அக்கரைப்பற்று மணிக்கூண்டுக் கோபுரசுற்றுவட்டம், பொத்துவில் வீதி, கிழக்கு வீதி ஊடாக பாடசாலை வளாகத்தைவந்தடைந்தது.ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றார்கள்,நலன்விரும்பிகள் என அதிகமானோர் கலந்து கொண்டு போட்டியாளர்களைஉற்சாகப்படுத்தினர்.

அக்கரைப்பற்று, அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலய வருடாந்த இல்ல

விளையாட்டு விழாவையொட்டிய, இல்லங்களுக்கிடையிலான சைக்கிள் ஓட்டப் போட்டி நாளை வெள்ளிக்கிழமை மு.ப.6.30 மணிக்கு அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய முன்றலிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்) 

 


Add new comment

Or log in with...