கொட்டகல கஹட்ட - ரச வாசனா’ வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டம் வெற்றிகரமாக நிறைவு! | தினகரன்


கொட்டகல கஹட்ட - ரச வாசனா’ வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டம் வெற்றிகரமாக நிறைவு!

இலங்கை வாடிக்கையாளர்களின் கெளரவத்தையும், ஆதரவையும் பெற்ற கொட்டகல கஹட்ட, 2012ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய ‘கொட்டகல கஹட்ட - ரச வாசனா 2019ஊக்குவிப்பு வேலைத் திட்டம்’, மிக வெற்றிகரமாக இடம்பெற்றது. இதில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு, 20 TVS ஸ்கூட்டி பெப் வண்டிகள் பரிசாக வழங்கப்பட்டன. பரிசு வழங்கும் வைபவம், அண்மையில் கொழும்பு கிரான்ட் ஒரியன்ட் ஹொட்டேலில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. 

பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பன குறிப்பிடப்பட்ட எந்தவொரு அளவிலுமான கொட்டகல கஹட்ட மேலுறை ஒன்றை த.பெ. இல. 161, கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பி வைத்த விண்ணப்பதாரிகள் ‘கொட்டகல கஹட்ட - ரச வாசனா 2019’ போட்டிக்குத் தகுதி பெற்றனர். ஊக்குவிப்பு வேலைத் திட்டம் இடம்பெற்ற காலப்பகுதியில், கொட்டகல கஹட்ட ஊக்குவிப்பு பிரசார வாகனங்கள் நாடு தழுவிய ரீதியில் 20மாவட்டங்களில் உள்ள 112நகரங்களில் சுற்றுலா மேற்கொண்டிருந்தன. இந்த வாகனங்கள் மூலமாகவும் விண்ணப்பங்கள் பொறுப்பேற்கப்பட்டிருந்தன. 

‘கொட்டகல கஹட்ட - ரச வாசனா 2019’ போட்டி பற்றி கருத்து வெளியிட்ட ஊ று மெக்கி பிஎல்சி நிறுவனத்தின் உதவிப் பொது முகாமையாளர் (விற்பனை) துமிந்த கொத்தலாவல, ‘நாம் கொட்டகல கஹட்ட - ரச வாசனா’ ஊக்குவிப்பு வேலைத் திட்டத்தை நான்காவது வருடமாகவும் செயற்படுத்தியுள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் முகமாகவே இது இம்முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த மூன்று வருடங்களாக ‘ரச வாசனா ஊக்குவிப்பு வேலைத் திட்டம்’ மிகவும் சிறந்த வகையில் வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது.

 தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த வரவேற்புக்களைக் காரணமாகக் கொண்டு, இந்த வருடத்திலும் இந்தப் போட்டியை நடத்த நாம் தீர்மானித்திருந்தோம்.” என்று கூறினார். 

2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட கொட்டகல கஹட்ட, இந்நாட்டில் மிகக் குறுகிய காலத்தில் சந்தையில் மூன்றாவது அதிகூடிய விற்பனையைக் கொண்ட தேயிலை வர்த்தகப் பெயராக மாறியுள்ளது. இது, உள்நாட்டுத் தேயிலையின் சுவை, குணம், நறுமணம் ஆகிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து பெற்றுக் கொடுக்கும் சிறந்ததொரு தேநீர் பானமாக வாடிக்கையாளர்களிடையே நம்பிக்கையை வென்றுள்ளது.    


Add new comment

Or log in with...