மீளமைக்கப்பட்டுள்ள பெஷன் பக் வத்தளை காட்சியறை | தினகரன்


மீளமைக்கப்பட்டுள்ள பெஷன் பக் வத்தளை காட்சியறை

முன்னணி ஆடை விற்பனை நிறுவனமான பெஷன் பக், தனது முக்கிய காட்சியறைகளில் ஒன்றான வத்தளை நிலையத்தை மீளமைத்து, மெருகூட்டி, புதிய வடிவமைப்புடன் அண்மையில் மக்களிடம் கையளித்துள்ளது. சுமார் ஒரு தசாப்த காலத்திற்கும் அதிகமாக அங்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் வசதிகளை அதிகரிக்கும் வகையில் இது மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 

பெஷன் பக் நிறுவனத்தின் வத்தளை காட்சியறையானது, மேலதிக இடவசதிகளுடன், அதிகளவு வாடிக்கையாளர்கள் கொள்வனவுகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் அங்கு இலகுவான சிறந்ததொரு சூழல் ஒன்றை அமைத்துக்கொடுத்து, பல மாடிகளைக் கொண்ட ஒரு புதிய கட்டடமாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான கண்கவர் ஆடை வகைகள், காலணிகள் உட்பட ஏனைய சகல கொள்வனவுகள், ஏராளமான பரிசுப் பொருட்கள் மற்றும் வீட்டுத் தளபாடங்கள் என பல்வேறு அம்சங்களைக் கொண்டு இது அமைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் ஏனைய அனைத்துக் கிளைகளையும் போன்றே இந்தக் கிளையும் மகளிர், ஆடவர் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்ற வகையிலான, தேவையான அலுவலக ஆடை வகைகள், சாதாரண நிகழ்வுகளுக்கு அணியக்கூடிய ஆடைகள், வைபவங்கள், கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் போது அணியக்கூடிய ஆடைகள் உட்பட அனைத்து ஆடைத் தேவைகளுக்கும் ஏற்ற உற்பத்திகளைப் பெற்றுக் கொடுக்கிறது. 

திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பிரதம நிறைவேற்று அதிகாரி (விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்) சபீர் சுபைன், ‘மறுசீரமைக்கப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்ட வத்தளை கிளையானது, இவ்வருடத்தின் எமது முக்கியமான ஒரு செயற்பாடாகக் காணப்படுகிறது.

வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு நிறுவனம் என்ற வகையில், பெஷன் பக் நிறுவனம், எமது இந்தப் புதிய காட்சியறை திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் வருகை தந்த எண்ணிலடங்கா வாடிக்கையாளர்களின் அளவைக் கண்டு பூரிப்படைந்துள்ளது. இந்தப் புனரமைப்பின் மூலம் நாம் எமது வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் கொள்வனவு அனுபவத்தை மேலும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். ’ என்று தெரிவித்தார்.   Add new comment

Or log in with...