வியாபாரங்களுக்காக 'Seylan Merchant Portal’ அறிமுகம் | தினகரன்


வியாபாரங்களுக்காக 'Seylan Merchant Portal’ அறிமுகம்

வாடிக்கையாளர் அனுபவங்கள் மற்றும் செளகரியத்தை மேம்படுத்தும் வகையில் தனது சேவைகளை விரிவாக்கும் நடவடிக்கையில் செலான் வங்கி தனது ‘Seylan Merchant Portal’ சேவையை அறிமுகம் செய்துள்ளது. இலங்கையின் முதலாவது சர்வாசங்களும் நிறைந்த முழுமையான பன்நோக்கு டிஜிட்டல் கொடுப்பனவு கட்டமைப்பாக இந்த சேவை அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ளக்கூடியதாக இந்த சேவை அமைந்துள்ளதுடன், இலங்கையில் இடம்பெறும் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களுக்கு புதிய பரிமாணத்தை சேர்த்திடும் வகையில் ஒரே நாளிள் செயற்படுத்திக் கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது.  

இலங்கையின் சிறிய, நடுத்தரளவு வியாபாரங்களின் தொடர்ச்சியான அபிவிருத்தி தேவைகளை கவனத்தில் கொண்டு, இந்த துறைக்கு தொடர்ச்சியான புத்தாக்கமான சேவைகளை செலான் வங்கி அறிமுகம் செய்த வண்ணமுள்ளது. சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை துறைக்கு புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட கொடுப்பனவு வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதனுௗடாக, இலகுவாக, அணுகக்கூடிய, பாதுகாப்பான மற்றும் செளகரியமான ஒன்லைன் கொடுப்பனவு வசதிகளை ஏற்படுத்தியுள்ளதுடன், புத்தாக்கமான டிஜிட்டல் மாற்றியமைப்புகளினுௗடாக வாடிக்கையாளர் செளகரியத்தை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.  

இந்த டிஜிட்டல் செயற்பாட்டினுௗடாக, ஒன்லைன் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளும் வசதியற்ற இணையத்தளமொன்றைக் கொண்ட அல்லது கொண்டிராத வியாபாரங்களுக்கு, சமூக ஊடக வலைத்தளங்களை அடிப்படையாகக் கொண்டியங்கும் வியாபார உரிமையாளர்கள் மற்றும் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை செயற்படுத்த எதிர்பார்க்கும் கடை உரிமையாளர்களுக்கு அனுகூலமளிக்க செலான் வங்கி முன்வந்துள்ளது.  

இலங்கையின் டிஜிட்டல் வியாபாரத்துறையில் வங்கிச் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் முன்னணி வங்கி எனும் வகையில் வியாபார சமூகங்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களுக்கு நவீனயுக டிஜிட்டல் வியாபார செயற்பாடுகளை முன்னெடுக்க அவசியமான சாதனங்களை கொண்டிருப்பதை செலான் வங்கி உறுதி செய்கின்றது.  

Seylan Merchant Portal vd;gJ Visa & MasterCard கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்கால மெருகேற்றங்களுக்காக ஒரு-தடவை ஒன்றிணைப்பை மொபைல்கள் மற்றும் கணனிகளில் துலங்கலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பாவனையாளருக்கு நட்பான வகையில் வடிவமைக்கப்பட்ட அசல்-நேர அறிக்கைகள், உச்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 256 Bit SSL Secured & PCI certified கொடுப்பனவு கட்டமைப்பு மற்றும் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் உதவிகளை பெற்றுக் கொடுக்க தொடர்பு நிலைய உதவி வசதி ஆகியவற்றையும் கொண்டுள்ளது.    


Add new comment

Or log in with...