ஐ.தே.க. எம்.பி. சிசிர குமாரவிற்கு ஜன. 21 வரை வி.மறியல் நீடிப்பு | தினகரன்


ஐ.தே.க. எம்.பி. சிசிர குமாரவிற்கு ஜன. 21 வரை வி.மறியல் நீடிப்பு

புத்தளம் ஐ.தே.க. எம்.பி. சிசிர குமாரவிற்கு ஜன. 21 வரை வி.மறியல் நீடிப்பு-Shantha-Sisira Kumara Abeysekara-MP-Puttalam-Re Remanded Till Jan 21

பாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகரவின் விளக்கமறியல் எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் நீதிமன்றத்தினால் இன்றையதினம் (17) குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஜக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இவர், கடந்த 2004ஆம் ஆண்டு, சட்டவிரோதமாக துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு தொடர்பில் 2011மார்ச் மாதம் பிணை வழங்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு பிணை நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தபோதிலும், அதனை இரு முறை மீறியதாக தெரிவித்து, கடந்த வருடம் ஒக்டோபர் 10ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...