எம்மைப் பற்றி ஊடகங்கள் கூறுவது பொய்!

இங்கிலாந்து அரச குடும்பத்தில் மோதல் இல்லை என்றும், ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதாகவும் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரி முதல்முறையாக கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து தற்போதைய பிரச்சினை குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹரி தனது மனைவியும் ​ெஹாலிவுட் நடிகையுமான மேகன் மார்க்கெலுடன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற பதவியில் இருந்து விலகுவதாக வெளிப்படையாக அறிவித்திருந்தார்.அரச குடும்பத்தில் ஏற்பட்ட மனகசப்பால் அவர் இந்த முடிவினை எடுத்திருப்பதாக இங்கிலாந்தில் உள்ள ஆங்கில ஊடகங்களில் செய்திகள் பரவின.

இதனிடையே அரச குடும்பத்தில் பிரிவினையைத் தடுக்க இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசெபத் அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் அழைத்தார்.அப்போது ஹரி-_மேகன் தம்பதியின் முடிவு குறித்து கலந்து ஆலோசித்தனர். இந்தச் சந்திப்பு திங்களன்று ​ேநார்போல்க்கில் உள்ள சான்ட்ரிங்ஹாம் அரண்மனையில் நடந்தது.

அங்கு அரச குடும்பத்தினர் ஒருவருடன் ஒருவர் மனம் விட்டுப் பேசியதாக கூறப்படுகிறது.அதன் பின்னர் இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், "அரச குடும்பத்தில் மோதல் ஏற்பட்டதாக ஊடகங்கள் எங்களைப் பற்றி தவறான செய்திகளை வெளியிடுகின்றன. அரச குடும்பத்தில் மேகனின் வரவு மூத்த இளவரசர் வில்லியமுக்கு பிடிக்கவில்லை, அதனால் அவர்களிடையே பழைய உறவு இல்லை என்று பொய்யாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.மேலும் மேகனை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்றும், வில்லியமின் இந்த அணுகுமுறையால் சகோதரர்களிடையே மனக் கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பல பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன. இந்தச் செய்திகள் எதிலும் உண்மை இல்லை" என்று தெரிவித்தனர்.

வில்லியம் தனது சகோதரர் ஹரியுடனான உறவில் விரிசல் ஏற்பட்டதை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டதுடன், "இனி நாங்கள் இணைந்து இருப்போம்" என்று ஊடகங்களிடம் தெரிவித்தார். காதல் மனைவி மேகனுக்கு உரிய மரியாதை கிடைக்காத காரணத்தால் அரச குடும்பத்தை விட்டு விலகுவதாக இளவரசர் ஹரி அறிவித்துள்ளார்.

 அதேசமயம் தனக்கென்று ஒரு வேலையை உருவாக்கிக் கொண்டு அதில் உழைத்து வாழப் போவதாக அண்மையில் இளவரசர் ஹரி அறிவித்திருந்தார். இது இங்கிலாந்து மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உலகை ஆண்ட இங்கிலாந்து அரச குடும்பம்தான் இங்கிலாந்து அரசின் முதன்மை உறுப்பினர்கள். அரசியின் ஒப்புதலுடன் தான் எந்தப் பணிகளையும் இங்கிலாந்து அரசு மேற்கொள்கிறது.

இங்கிலாந்து அரச குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களும் அதிகாரம் பெற்ற இளவரசர் மற்றும் இளவரசி ஆவர்.

இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ்_ டயானா தம்பதிக்கு பிறந்த குழந்தைகள் ஹரி, வில்லியம்.இதில் ஹரி ஒருசில வருடங்களுக்கு முன்னர் மேகன் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். இந்நிலையில் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற பதவியில் இருந்து விலகுவதாக ஹரி_ மேகன் தம்பதியினர் அண்மையில் அறிவித்தனர். அரச குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்பால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் லண்டனில் ​ெஹாலிவுட் திரைப்படமான 'தி லயன் கிங்' திரையிடப்பட்டது. அப்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னியின் தலைவர் ​ெடாப் இகர் கலந்து கொண்டார்.அப்போது அவரிடம் பேசிக்கொண்டிருந்த ஹரி, தன் மனைவி மேகன் மீண்டும் பின்னணி குரல் கொடுக்க விரும்புகிறார் என்றும், இதனால் அவருக்கு ஏதாவது வாய்ப்பு இருந்தால் தாருங்கள் என்றும் ​ெபாப் இகரிடம் கேட்டுக் கொண்டார். அதை பரிசீலிப்பதாக ​ெபாப் இகர் தெரிவித்திருந்தார்.

இளவரசர் தன்னிடம் கிண்டல் செய்கிறார் என்று ஆரம்பத்தில் ​ெபாப் இகர் நினைத்திருக்கிறார். ஆனால் தற்போது தான் உண்மையிலேயே அவர் மனைவிக்காக வேலை கேட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

இதனிடையே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இளவரசர் ஹரியை கனடாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அரச குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹரி மனகசப்பால் பிரிந்து செல்ல முடிவு செய்திருப்பது இங்கிலாந்து மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியிருக்க இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்கல் வெளியிட்டிருந்த அறிவிப்பை மகாராணி இரண்டாம் எலிசெபத் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த மாற்றத்திற்கு தாம் முழுமையான ஆதரவை அளிப்பதாக கூறியுள்ள அவர், எனினும் அரச குடும்பத்தின் முழு நேர உறுப்பினர்களாக அவர்கள் இருக்கவே தாம் விரும்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்கல் இருவரும் விலக உள்ளதாக அறிவித்த பிறகு, எதிர்காலத்தில் அவர்களது பங்கு என்னவாக இருக்கும் என்பது குறித்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த மாற்றம் ஏற்படும் காலத்தில் ஹரி மற்றும் மேகன் இருவரும் கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் மாறி மாறி தங்கள் காலத்தை செலவழிப்பதற்கு பிரிட்டன் ராணி ஒப்புக் கொண்டுள்ளார்.

"என் குடும்பத்தில் இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவு கொண்டு வருவது சிக்கலான ஒன்று. ஒரு சில வேலைகள் நிலுவையில் உள்ளன. ஆனால் வரும் நாட்களில் இது தொடர்பாக ஒரு முடிவு எட்டப்படும்" என்று ராணி கூறியுள்ளார்.

 ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் கனடாவில் குடியேறப் போவது குறித்தும், அவர்கள் பாதுகாப்புக்கான நிதி குறித்தும் இதுவரை எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். பெரும்பாலான க​ேனடியர்கள் ஹரி_ - மேகன் இங்கு குடியேற ஆதரவளிப்பார்கள் என்றும், எனினும் இது குறித்து இன்னும் நிறைய விவாதங்கள் நடக்க வேண்டியிருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.


Add new comment

Or log in with...