ராஜிதவின் பிணைக்கு எதிரான மனுவின் தீர்ப்பு 21இல் | தினகரன்


ராஜிதவின் பிணைக்கு எதிரான மனுவின் தீர்ப்பு 21இல்

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கிய உத்தரவுக்கு எதிராக சட்ட மா அதிபர் முன்வைத்த  மீளாய்வு மனு தொடர்பில் பிரதிவாதிகள் தரப்பிற்கு அழைப்பாணை விடுப்பதற்கான உத்தரவு எதிர்வரும் 21ஆம் திகதி பெற்றுக்கொடுக்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

குறித்த மீளாய்வு மனு இன்று (17)  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணையின்போது பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன  கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.  


Add new comment

Or log in with...