வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது | தினகரன்


வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளை இலங்கைக்கு கொண்டு வந்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (17) அதிகாலை டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரது பயணப் பொதியை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியபோது, அதில் வெளிநாட்டுச் சிகரெட்டுகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சந்தேக நபரிடமிருந்து 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுச் சிகரெட்டுகள் 10,800 ஐ சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

26 வயதுடைய இச்சந்தேகநபர், கிளிநொச்சி பரந்தன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.Add new comment

Or log in with...