அபுதாபியில் விபத்து; இலங்கை பெண் பலி | தினகரன்


அபுதாபியில் விபத்து; இலங்கை பெண் பலி

அபுதாபியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் பயணித்த பஸ் வண்டி விபத்திற்குள்ளானதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பஸ் வண்டியொன்றும் லொறியொன்றும் மோதி விபத்திற்குள்ளானது.

நேற்று (16) இடம்பெற்ற இவ்விபத்தில் இலங்கை பெண் உட்பட 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பஸ் சாரதி ஒருவரும் உயிரிழந்துள்ளதோடு, உயிரிழந்தவர்களில் ஏனையோர் பெண்களாவர்.

அத்தோடு குறித்த பஸ்ஸில் பயணித்த 19 பேர் காயமடைந்துள்ளனர்.  அவர்களில் பெரும்பாலனவர்கள் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, அதில் இலங்கையர்களும் உகண்டாவைச் சேர்ந்தவர்களும் அடங்குகின்றனர்.

 

 

 Add new comment

Or log in with...