அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 15 வருட சிறை | தினகரன்


அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 15 வருட சிறை

அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவ லியனகே சுனிலுக்கு 15 வருடகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இச்சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவருக்கு இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  

கடந்த 2012ஆம் ஆண்டு 14 வயதுச் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்  மாத்தறை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவினரால்  கடந்த 2012ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.


Add new comment

Or log in with...