கடற்படை முன்னாள் பேச்சாளர் DKP தஸநாயக்க ரியர் அட்மிரலாக பதவியுயர்வு | தினகரன்


கடற்படை முன்னாள் பேச்சாளர் DKP தஸநாயக்க ரியர் அட்மிரலாக பதவியுயர்வு

கடற்படை முன்னாள் பேச்சாளர் DKP தஸநாயக்க ரியர் அட்மிரலாக பதவியுயர்வு-Commodore DKP Dassanayake Promoted as Rear Admiral

கடற்படையின் முன்னாள் பேச்சாளரான கடற்படையின் உயர் பதவிகளில் ஒன்றான Commodore பதவியிலிருந்து டி.கே.பி. தஸநாயக்க ரியர் அட்மிரலாக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.

1987 ஆஅம் ஆண்டு கடேற் அதிகாரியாக கடற்படையில் இணைந்த அவர், விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் பெரும் பங்காற்றியுள்ளார்.

ஆயினும் கடந்த ஆட்சிக் காலத்தின்போது,  11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விடயம் தொடர்பில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008 - 2009 காலப் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில், தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என அவர் மறுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...