புலனாய்வு பிரிவுகளை பலப்படுத்த விசேட சட்டம் | தினகரன்


புலனாய்வு பிரிவுகளை பலப்படுத்த விசேட சட்டம்

அதிகாரங்களை அதிகரிக்கவும் யோசனைகள்

புலனாய்வுப் பிரிவுகளை பலப்படுத்தும்வகையில் புதிய சட்டமூலம் ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது.தேசிய பாதுகாப்பை பலப்படுத்தல்,புலனாய்வுப் பிரிவுகளைப் பலப்படுத்தல்,புலனாய்வுத் துறைக்கு அதிகாரம் வழங்கல் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஏற்ப இந்தச் சட்ட மூலம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.இதில் இவ்விடயங்களை தெளிவுபடுத்திய அமைச்சர் பந்துல குணவர்தன; தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். புலனாய்வுப் பிரிவினர் பெற்றுக்கொள்ளும் தகவல்கள் விலைமதிக்க முடியாதவை. அவர்களது சேவை அளப்பரியவை. பயங்கரவாத ஒழிப்பில் அவர்கள் மேற்கொண்ட பங்களிப்பு மிகவும் காத்திரமானது.

எனினும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் புலனாய்வுப் பிரிவினர் தவறாக வழி நடத்தப்பட்டுள்ளனர். புலனாய்வுப் பிரிவினரில் பெரும்பாலானோர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்களது குடும்பத்திற்கு சம்பளம் வழங்காமல் பழிவாங்கப்பட்டது.இராணுவத்தினரை பழிவாங்கும் நடவடிக்கைகளில் இதுவும் ஒரு அம்சமாகவே இருந்தது.

லோரன்ஸ் செல்வநாயகம்  

 Add new comment

Or log in with...