ரோஹண விஜேவீரவின் மனைவியின் மனு நிராகரிப்பு | தினகரன்


ரோஹண விஜேவீரவின் மனைவியின் மனு நிராகரிப்பு

ஜே.வி.பியின் ஸ்தாபக தலைவர் ரோகன விஜேவீரவின் சடலத்தை சமர்ப்பிக்குமாறு அவரது மனைவி தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவை நிராகரிக்கும் மேன்முறையிட்டு நீதிமன்ற தீர்ப்பை சவாலுக்குட்படுத்தி விஜேவீரவின் மனைவி தாக்கல் செய்திருந்த முறையீட்டு விண்ணப்பம் நேற்று உச்ச நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது.  

மேற்படி ஆட்கொணர்வு மனு தொடர்பாக, மனுதாரர் நீதிமன்ற விசாரணையை மேற்கொள்ள 30வருட காலம் முடியாமல் இருந்த காரணத்தால் அதனை நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 2019பெப்ரவரி 11ஆம் திகதி தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் மேற்படி முறையீட்டு மனுவை தொடர்ந்து விசாரிப்பதற்கு சட்ட அடிப்படை எதுவும் இல்லை என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம் நேற்று அதனை முற்றாக நிராகரித்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிசிர டி ஆப்ரூ, எஸ். துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகியோரே இந்த மனுவை நிராகரித்தனர்.


Add new comment

Or log in with...