பிரதேச செயலக பிரிவுகள் தோறும் தேசிய பாடசாலைகள் | தினகரன்


பிரதேச செயலக பிரிவுகள் தோறும் தேசிய பாடசாலைகள்

மூன்று மாதங்களில் நிர்மாணிக்க திட்டம்

எதிர்வரும் 3மாதங்களுக்குள் பிரதேச செயலகப் பிரிவுகள் அனைத்திற்கும் தேசிய பாடசாலையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.  

இதற்கிணங்க நாட்டிலுள்ள 124பிரதேச செயலர் பிரிவுகள் தோறும் 124தேசிய பாடசாலைகளை ஸ்தாபிக்கப் போவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.  

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் இந்த செயற்றிட்டம் தொடர்பில் தமக்கு பணிப்புரைகளை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.  

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தேசிய வைபவம் லக்கல தேர்தல் தொகுதியில் வில்கமுவயில் நேற்று நடைபெற்றது.இங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்வியமைச்சர் இருந்த மாவட்டத்திலும் தேசிய பாடசாலைகள் சில நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இம்முறை பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் 1,000 தேசிய பாடசாலைகளுக்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டது. அதில் குருநாகலில் நான்கும் பொலன்னறுவையில் நான்கும் நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டதெனினும் மேற்படி 124 தேர்தல் தொகுதிகளுக்கும் ஒரு தேசிய பாடசாலை கூட கிடையாது. (ஸ)Add new comment

Or log in with...