இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே | தினகரன்


இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக சிரேஷ்ட இராஜதந்திரியான கோபால் பாக்லே விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடில்லியிலுள்ள இந்திய பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக தற்போது பணியாற்றிவரும் கோபால் பாக்லே, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராகவும் பணியாற்றியுள்ளார். 1992 ஆம் ஆண்டு இந்திய வெளிவிவகார சேவையில் இணைந்த கோபால் பாக்லே, மிக முக்கிய பொறுப்புக்களை வகித்து வந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது கடமையாற்றிவரும் இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, அமெரிக்காவில் இந்திய தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Add new comment

Or log in with...