அவன்கார்ட் நிறுவன தலைவர் கைது | தினகரன்


அவன்கார்ட் நிறுவன தலைவர் கைது

அவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுக்கொண்டு நாடு திரும்பியபோதே, நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு (16) 12.25 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து  சிங்கப்பூர் ஏயார்லைன்ஸ் எஸ்.கியூ. 468  விமானத்தில்  சர்வதேச பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்தது.

அவன்கார்ட் சம்பவம் தொடர்பான வழக்கில் காலி நீதிமன்ற நீதவான் பிறப்பித்த உத்தரவின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...