தஹஜ்ஜுத் தொழுகை

உபரியான வணக்கங்களில் ஒன்று தான் தஹஜ்ஜுத் ஆகும்.இதற்கு பின்னிரவு தொழுகை என்று பொருள் படும்.இத் தொழுகை மற்ற உபரித் தொழுகையை விட ரக்அத்துக்களின் எண்ணிக்கையிலும் நீண்ட நேரம் நின்று தொழுவதிலும் சிறப்புற அமைந்துள்ளது.மேலும் நமது பிரார்த்தனைகள் இறைவனால் அங்கீகரிக்கப்படக்கூடிய நேரங்களில் ஒரு நேரமாக இரா தொழுகை உள்ளது.

அல்லாஹுத்தஆலா குர்ஆனில் நபியே இன்னும் இரவின் (ஒரு சில) பகுதியில் உமக்கு உபரியான ( நபிலான ) தஹஜ்ஜுத் தொழுகையை தொழுது வருவீராக,  இதன் பாக்கியத்தால் உம்முடைய இறைவன் மகாமே மஹ்மூதா என்னும் (புகழ்பெற்ற ) தளத்தில் உம்மை எழுப்ப போதுமானவன்.( 17 : 79 )

போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் சிறிது நேரம் தவிர்த்து தொழுகைக்காக எழுந்து நிற்பீராக.அதில் பாதி (நேரம் ) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்ளலாம். அல்லது அதை விட சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக .மேலும் குர்ஆனை தெளிவாகவும்,நிறுத்தி,நிறுத்தியும் ஓதுவீராக ( 73 : 1,2,3,4 )

இரவுத் தொழுகையை  தொழுமாறு மேற்கண்ட வசனங்கள் மூலமாக தெளிவு படுத்தி அதன்பால் இறைவன் திருமறையில் ஆர்வமூட்டுகின்றான்.அவர்கள் விழுந்து சுஜுது செய்தவர்களாய்த் தம் இறைவனை புகழ்ந்து துதிப்பார்கள்.அவர்கள் பெருமையடிக்கவும் மாட்டார்கள்.அவர்களுடைய விலாக்கள் படுக்கைகளிலிருந்து ( தூக்கத்தை துறந்து ) அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும்,நம்பிக்கையார்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்.மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து ( தர்மங்களில்) செலவும் செய்வார்கள்.( அல் குர்ஆன் 32 :15,16 )

எம்.ரபியுத்தீன்
திறப்பனை


Add new comment

Or log in with...