முல்லைப் பெரியாறு அணை ஸ்தாபகரின் உருவச்சிலைக்கு மாலை அணிவிப்பு | தினகரன்


முல்லைப் பெரியாறு அணை ஸ்தாபகரின் உருவச்சிலைக்கு மாலை அணிவிப்பு

கேர்ணல் ஜான்பென்னின் 179 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு,

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்ச் செல்வம் அன்னாரின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்தார்.லோயர்கேம்பில் உள்ள கேர்ணல் ஜான்பென்னிக்குக் நினைவு மணிமண்டபத்திற்குச் சென்ற துணை முதல்வர்,அங்குள் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேனி,மதுரை,திண்டுக்கல்,சிவகங்கை,ராமநாதபுரம் உட்பட ஐந்து மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக முல்லைப் பெரியாறு திகழ்கிறது.

இந்த அணையை கட்டிய இங்கிலாந்து பொறியாளர் கேர்ணல் ஜான் பென்னிகுக்கின் நினைவாக அவருக்கு தமிழக அரசு சார்பில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு லோயர்கேம்ப்பில் நினைவு மண்டபமும் அவருடைய முழு உருவ வெண்கல சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மணி மண்டபத்திற்கு தேனி மாவட்ட மக்கள் மட்டுமன்றி பிற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். அவருடைய 179வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஆண்டு தமிழக அரசு முதன் முறையாக அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது. இதையொட்டி லோயர்கேம்ப்பில் உள்ள மணி மண்டபத்தில் பென்னிகுக்கின் முழு உருவச் சிலை அலங்கரிங்கப்பட்டும், மண்டப வளாகம் முழுதும் வண்ண விளக்குகளால் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.


Add new comment

Or log in with...