திருவாபரணப்பெட்டி சபரிமலை நோக்கி யாத்திரை | தினகரன்


திருவாபரணப்பெட்டி சபரிமலை நோக்கி யாத்திரை

மகரவிளக்கு பூஜையையொட்டி திருவாபரணப் பெட்டி பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலை நோக்கி புறப்பட்டது.இந்த திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி, மகர விளக்கு பூஜையின்போது சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுவதற்காக பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று மாலை 6.30 மணிக்கு இந்த திருவாபரண பெட்டி சபரிமலை சன்னிதானத்தை வந்தடைந்தது.

பாரம்பரிய முறைப்படி வரவேற்புக்குப் பின்னர் 18ஆம் படி வழியாக திருவாபரணப் பெட்டி எடுத்துச் செல்லப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுவாமி ஐயப்பனுக்கு விசே‌ஷ தீபாராதனை காட்டி மகர விளக்கு பூஜை நடைபெற்றது.

மகர விளக்கு பூஜை நடைபெறும் அதே நேரத்தில், சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரிந்ததுடன்,சரண கோஷம் முழங்க பக்தர்கள் ஜோதியை தரிசித்தனர்.மகர விளக்கு பூஜையில் பங்கேற்கவும்,மகர ஜோதியை காணவும் இலட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சபரிமலையில் பக்தர்கள் குவிந்துள்ளதால் அங்கு பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்

இப்பகுதியில் இரண்டாயிரம் பொலிஸசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...