நத்தாருக்கு பின் A/L பரீட்சை பெறுபேறு

2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நத்தார் பண்டிகை தினத்திற்கு பின்னர் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். 

இம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர்.

புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 98 ஆயிரத்து 229 பரீட்சார்த்திகளும், பழைய பாடத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 475 பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...