2020 திருமதி உலக அழகி இலங்கையின் கரோலின் ஜூரி | தினகரன்

2020 திருமதி உலக அழகி இலங்கையின் கரோலின் ஜூரி

Mrs. World 2020: Caroline Jurie

2020 ஆம் ஆண்டின் திருமதி உலக அழகி மகுடத்தை 2020 உலக அழகி திருமதி இலங்கையின் கரோலின் ஜூரி-Mrs World 2020-Caroline Jurieஇலங்கையைச் சேர்ந்த கரோலின் ஜூரி சூடியுள்ளார்.

நேற்று (06) அமெரிக்காவின் அமெரிக்காவின் லாஸ்வெகாஸில் (இலங்கை நேரப்படி இன்று (07) அதிகாலை 6.00 மணியளவில்) இடம்பெற்ற இறுதிப் போட்டியின் போதே அவருக்கு இந்த மகுடம் சூட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா மற்றும் இந்தியா, பங்களாதேஷ், மலேசியா உள்ளிட்ட  49 நாடுகளைச் சேர்ந்த திருமணமான பெண்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் அவர் இப்பட்டத்தை வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இடம் அயர்லாந்திற்கும், மூன்றாமிடம் வேர்ஜின் தீவுகளுக்கும் வழங்கப்பட்டது.

இதற்கு முன்னர் இந்த மகுடத்தை 1984 ஆம் ஆண்டு ரோஸி சேனாநாயக்க வென்றிருந்தார். 

உலக திருமதி (Mrs. Women) போட்டி 1984 இல் ஆரம்பிக்கப்பட்டு அதன் முதலாவது கிரீடமே இலங்கைக்கு கிடைத்த நிலையில் 35 வருடங்களுக்கு பின்னர் அந்த மகுடத்தை மீண்டும் கரோலின் ஜூரி இலங்கைக்கு கொண்டு வந்து, அதற்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mrs. Women ஆக முன்னெடுக்கப்பட்ட குறித்த போட்டி (1984, 1986, 1987) பின்னர் Mrs. World ஆக முன்னெடுக்கப்பட்டது.

2020 உலக அழகி திருமதி இலங்கையின் கரோலின் ஜூரி-Mrs World 2020-Caroline Jurie

இலங்கையில் இடம்பெற்ற இலங்கை திருமதி (Mrs. Sri Lanka) பட்டத்தை வென்று தெரிவான அவர், தற்போது திருமதி உலக அழகி பட்டத்தை தனதாக்கியுள்ளார்.

கடந்த வருடம் (2019) இப்பட்டத்தை வியட்னாமைச் சேர்ந்த ஜெனிபர் லி சூடியிருந்தார்.

2020 உலக அழகி திருமதி இலங்கையின் கரோலின் ஜூரி-Mrs World 2020-Caroline Jurie

இம்மகுடத்தை அமெரிக்கா, 6 தடவைகள் (1988, 2000, 2002, 2007, 2011, 2013) சூடியுள்ளதோடு, பெரு இரு தடவைகளுகம் (1989, 2017) ரஷ்யா இரு தடவைகளும் (2006, 2009), இலங்கை இரு தடவைகளும் (1984, 2020) வெற்றி கொண்டுள்ளதோடு, வியட்னாம் (2019), ஹொங்கொங் (2018), தென்னாபிரிக்கா (2016), பெலாருஸ் (2015), உக்ரைன் (2008), இஸ்ரேல் (2005), தாய்லாந்து (2004), இந்தியா (2001), கொஸ்தாரிகா (1995), நியூஸிலாந்து (1987), கொலம்பியா (1986) ஆகிய நாடுகள் தலா ஒவ்வொரு தடவையும் வெற்றி கொண்டுள்ளன.

2020 உலக அழகி திருமதி இலங்கையின் கரோலின் ஜூரி-Mrs World 2020-Caroline Jurie

Mrs. Wolrld Sri Lanka


Add new comment

Or log in with...