Home » அலி ஜின்னா: ஆசியாவே ரிதீ ஹட (ஆசியாவின் வெள்ளிக்குரல்) நூல் மூலம் இலங்கை-பாகிஸ்தான் உறவு வலுவடையும்

அலி ஜின்னா: ஆசியாவே ரிதீ ஹட (ஆசியாவின் வெள்ளிக்குரல்) நூல் மூலம் இலங்கை-பாகிஸ்தான் உறவு வலுவடையும்

by sachintha
December 8, 2023 6:25 am 0 comment

பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் வஜீட் ஹஸன் ஹஸ்மி

ஸ்தாபகர் முஹம்மத் அலி ஜின்னா பற்றிய சிங்கள மொழியில் புத்தகம் வெளிவருவது இலங்கை-_பாகிஸ்தான் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என இலங்கைக்கான பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் வஜீட் ஹஸன் ஹஸ்மி தெரிவித்துள்ளார்.

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சந்தன விஜேகோன் எழுதிய ‘அலி ஜின்னா: ஆசியாவே ரிதீ ஹட(Ali jinna: Silver Voice of Asia) புத்தக வெளியீட்டு விழா நுகேகொட சென். ஜோன்ஸ் கல்லூரியில் அண்மையில்நடைபெற்ற போதே பிரதி உயர் ஸ்தானிகர் இதனைத் தெரிவித்தார்.

இதழியல், அரசியல், தொல்லியல், வரலாறு என பல்வேறு துறைகளில் பல நூல்களை எழுதிய சந்தன விஜேகோனின் 9 ஆவது நூல் இதுவாகும். சிங்கள வாசகர்களுக்காக பாகிஸ்தான் ஸ்தாபகர் அலி ஜின்னாவின் வரலாறு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, வஜீட் ஹஸன் ஹஸ்மி மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ‘இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீண்ட காலமாக நட்புறவு நிலவி வருகிறது. இன்று அந்த உறவுகள் வலுப்பெற்றுள்ளன. அலி ஜின்னா பாகிஸ்தானை நிறுவியவராவார். ஊடகவியலாளர் சந்தன விஜேகோன் அவரின் பெயரில் ஒரு நூலை எழுதியுள்ளார். இது இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் நட்புறவை மேலும் வலுப்படுத்துகிறது. நான் ஒரு வருடத்திற்கு முன்பு இலங்கைக்கு வந்தேன், இலங்கை மக்கள் மிகவும் நட்பானவர்கள். தற்போதைய பொருளாதார நிலைமை இலங்கையர்களையும் பாகிஸ்தானியர்களையும் ஒரே விதத்தில் பாதித்துள்ளது. இதிலிருந்து விடுபட்டு இரு நாடுகளும் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும்’ என்றார்.

அங்கு தலைமை உரையாற்றிய மேஜர் ஜெனரல் (கலாநிதி) பிரதாப் திலகரத்ன கூறியதாவது:

“பாகிஸ்தானின் தந்தை என்று கருதப்படும் முகமது அலி ஜின்னா, அனைத்து பாகிஸ்தானியர்களாலும் அன்புடனும் நன்றியுடனும் நினைவுகூரப்படுகிறார். பாகிஸ்தானியர்களின் அடையாளத்தை அவர்களுக்கு உணர்த்திய இந்த மாபெரும் தலைவர் தொலைநோக்குப் பார்வையுடன் உழைத்தவர்.

பாகிஸ்தான் தன் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதில் அலி ஜின்னாவின் மூலோபாயத் தலையீடு முக்கியமானது என்பது பல அம்சங்களிலிருந்து தெளிவாகிறது. பாகிஸ்தானின் எதிர்காலம் எவ்வாறு வழிநடத்தப்பட வேண்டும் என்பது பற்றிய அவரது பார்வை, புதிய அரசு உருவாகுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அதாவது 1947 ஓகஸ்ட் 11ஆம் திகதி அந்நாட்டின் அரசியலமைப்பு சபையில் அவர் ஆற்றிய உரையிலிருந்து நன்கு தெளிவாகிறது.

சந்தன விஜேகோன் எழுதிய ‘அலி ஜின்னா ஆசியாவின் வெள்ளிக்குரல்’ என்ற நூல் சிங்கள வாசகர்களுக்கு அலி ஜின்னாவைப் பற்றிய விரிவான புரிதலை ஏற்படுத்துகிறது. இந்தப் புத்தகம் அந்த மாபெரும் ஆளுமையின் வாழ்க்கைப் பயணத்தை மட்டுமல்ல, இந்தியா, பாகிஸ்தான், தெற்காசியா மற்றும் உலக வரலாற்றையே மாற்றியமைத்த அலி ஜின்னாவின் ஞானத்தையும் கோட்பாட்டையும் மையமாகக் கொண்டுள்ளது. இந்த மாபெரும் ஆளுமையின் பயணத்தை சுவையுடன் அழகுற சந்தன எடுத்தியம்புகிறார்”.

நுகேகொட சென் ஜோன்ஸ் கல்லூரியின் பிரதி அதிபர் ரசாஞ்சலி ஜயதிலக உரையாற்றுகையில்

“சந்தின விஜேகோன் எமது பல்கலைக்கழகத்தின் பிரபல பழைய மாணவராவார். அவர் பல விடயங்கள் குறித்து பல நூல்களை எழுதியுள்ளார். இன்று வெளியிடப்பட்டுள்ள இந்நூல் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வளர்க்கும். இது நம் நாட்டுக்கு மிகவும் முக்கியமான சந்தர்ப்பமாகும். எங்கள் கல்லூரிக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்” எனத் தெரிவித்தார்.

நுகேகொட சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் தனராஜ் ராமரட்ணம், உபதலைவர் ரவி விக்கிரமகே, கொழும்பு பல்கலைக்கழக ஸ்ரீபாலி பீட பேராசிரியர் ரஞ்சன் ஹெட்டி ஆராச்சி, பேராசிரியர் தர்மகீர்த்தி ஸ்ரீ ரஞ்சன் உள்ளிட்ட ்பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT