டிசம்பர் இறுதியில் A/L பெறுபேறு

2019ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாத இறுதி வாரத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர்நாயகம்சனத் பூஜித அறிவித்துள்ளார்.

இவ்வருடம் க.பொ.த. உயர் தர பரீட்சை ஓகஸ்ட் 05 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை இடம்பெற்றதோடு,  2,678 பரீட்சை நிலையங்களில், 37,704 பேர் பரீட்சைக்கு தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...