O/L பரீட்சார்த்திகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஆளடையாளப்பத்திரம் | தினகரன்


O/L பரீட்சார்த்திகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஆளடையாளப்பத்திரம்

எதிர்வரும் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களில் இதுவரை  தேசிய அடையாள அட்டை கிடைக்காதவர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் 65,000  அத்தாட்சிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இவ்வாறான 10,000 அத்தாட்சிப் பத்திரங்களை இன்றும் நாளையும் வழங்கவுள்ளதாக, திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்தார்.

புகைப்படத்தினுடனான தேசிய அடையாள அட்டையின் தகவல் உள்ளடக்கப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்பட்ட உத்தியோகத்தரின் கையொப்பத்துடன் வழங்கப்படும் இந்த அத்தாட்சிப்பத்திரம், பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர், சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 


Add new comment

Or log in with...