நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன இராஜினாமா | தினகரன்


நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன இராஜினாமா

நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன இராஜினாமா-Eran Wickramaratne Resigned From His Portfolio

தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (19) தனது உத்தியோகபூர்வமாக ட்விற்றர் கணக்கில் அவர் இதனை அறிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ, எமது மக்களை ஒன்றிணைத்து, முன்னோக்கி செல்ல ஞானத்துடனும், பகுத்துணர்வுடனும் செயற்பட வாழ்த்துவதாகவும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, தோல்வி அடைந்ததையடுத்து, தேர்தலுக்கு அடுத்த தினம் (17) ஏழு பேரும் நேற்றைய தினம் (18) இருவரும் என, அக்கட்சியில் அங்கம் வகிக்கும் 9 பேர் தங்களது அமைச்சுப் பொறுப்புகளிலிருந்து இராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போது எரான் விக்ரமரத்ன தனது அமைச்சுப் பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...