நீரிழிவை குணப்படுத்த முடியாது; கட்டுப்படுத்தலாம் | தினகரன்


நீரிழிவை குணப்படுத்த முடியாது; கட்டுப்படுத்தலாம்

அதிகமான தாகம், அதிகமாக சிறுநீர் கழித்தல், உடல் மெலிதல், பாரம் குறைதல் ஆகியனவே நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும்.

குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு நீரிழிவு இருந்தால் முப்பத்தைந்து வயதாகும் போது நோய்குறித்து பரிசோதனை செய்ய வேண்டும்.

நீரிழிவு  நோய்ப்  பாதிப்பினால் கால் இழப்பு, சிறுநீரகப் பாதிப்பு, கண்பார்வை இழப்பு மற்றும் பாலியல் செயற்பாடுகளில் தளர்வு போன்றனவற்றால் அவதிக்குள்ளாக வேண்டியிருக்கும்.

ஒரு பேனா வடிவில் இன்சுலின் வந்துள்ளது. இதனை உபயோகிக்கும்போது வலி குறைவாகவே இருக்கும். இதனால் பிரச்சினையின்றி நாமே நமக்கு இன்சுலினை ஏற்றிக் கொள்ளலாம்.

மெட்போர்மின் எடுத்துக் கொண்டே இனிப்பு பதார்த்தங்கள் குறித்து சிலர் அசட்டையாக  இருப்பார்கள். இதனால் உடலில் சீனி அதிகரித்து சிறுநீரகத்தையும் பாதிப்படையச் செய்யும். ஆனால் மெட்போர்மின் எடுத்ததாலேயே சிறுநீரகம் பாதிக்கப்பட்டது என்பது பிழையான கருத்தாகும்.

உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ஆம் திகதி சர்வதேச நீரிழிவு நோய் தினம் அனுட்டிக்கப்பட்டு வருகிறது.

ஜயவர்தனபுர, நாவல, விமலா விஹார வீதி, இல 11ஃ1இல் அமைந்துள்ள னுயைடிநவiஉ குழழவ உயசந ரூ சுநாயடிடைவையவழைn ஊநவெசந எனும் நீழிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை நிலையத்தின் பிரதம வைத்திய நிபுணர் சந்திம நாமரத்ன, கருத்துத் தெரிவிக்கையில், நீரிழிவு நோய் உலக ரீதியாக அதிவேகமாக மக்களிடையே பாதிப்பினை ஏற்படுத்திவரும் நோயாகும். இன்று உலக சனத்தொகையில் 366மில்லியன் பேரை பாதித்துள்ளதுடன், சுமார் ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய்ப் பாதிப்புக் காணப்படுகின்றது. ஒவ்வொரு இருபது நிமிடத்திற்கு ஒருவரின் கால் அகற்றப்படுவதாகவும் ஒரு மணி நேரத்திற்கு மூவரின் கால்கள் அகற்றப்படுவதாகவும் வைத்தியர் சுட்டிக்காட்டினார்.

டொக்டர் நாமரத்தின மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணம் அது மரபு ரீதியாக ஏற்படுகின்றது என்பதாகும்.   நீரிழிவு  அதி வேகமாக பரவுவதற்குக் காரணமாக இருப்பது எமது வாழ்க்கை முறை மாற்றமாகும். உணவு முறை, ஓய்வற்று தொழில் செய்தல், அதிகமான மனஅழுத்தம் மற்றும் பாஸ்புட் வகையும் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் மனிதன் நாற்பது வயதாகும் போது நோய்குள்ளாகின்றனான். இந்நோயின் தாக்கத்தினால் நாட்டின் பொருளாதாரத்திற்கும் அதிகமான தாக்கம் ஏற்படுகின்றது. இந்நோய் ஆசிய நாடுகளிலுள்ள பாதகமான தன்மையாகும்.

நீரிழிவு நோய் இவ்வாறாக விரைவாக  பரவிவதற்கு முக்கிய காரணம்  மக்களிடம் இந்நோய் குறித்து சரியானது விழிப்புணர்வு இல்லாத தன்மையாகும். உலக ரீதியாக நீரிழிவு நோய் தாக்கத்தின் புள்ளி விபரங்கள் அதிகமாக இருக்கலாம். அதாவது நோயின் தாக்கம் குறித்து வெளிவரும் விடயங்களைவிட இந்நோயின் தன்மையைக் குறித்து அறியாதவர்கள் அதிகமாக இருக்கலாம். 336மில்லியன் என்பது அறியப்பட்டவர்கள். ஆனால் நோய் தாக்கத்திற்குள்ளானவர்கள் இன்னும் அதிகமாகும் என்று புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இன்னும் பத்து வருடங்களில் இந்நோயின் தாக்கம் அதிகரிக்கும் தன்மையுள்ளது. நீரிழிவு நோயினால் அதிகமாக கோபம், மறதி உருவாகுவதால் சமூகத்திற்கும் நாட்டுக்கும் பாரிய பிரச்சினையை உருவாக்க வல்லது.

இன்று நீரிழிவு நோயிலிருந்த தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது. நீரிழிவு நோயின் தாக்கம் உச்சந்தலையிலிருந்து கால் பாதங்கள் வரையுள்ளது.  இந்நோயை குறித்து அறிந்து  இதற்கான வைத்திய சிகிச்சைப் பெற வேண்டியுள்ளது. 

விசேடமாக நாற்பது வயதின் பின்னர் இரத்தம் பரிசோதிப்பது முக்கியமானது. இரத்தத்தில் சீனியுள்ளதை பரிசோதிப்பதற்கு சுமார் எட்டு முதல் பத்து வரை மணிநேரத்திற்கு உணவு, தண்ணீரை விடுத்து (குயளவiபெ) இரத்தம் பரிசோதித்தல் முக்கியமானது. இரத்தம் பரிசோதிப்பதற்காக கையிலிருந்து அல்லது விரல் நுனியிலிருந்து இரத்தம் எடுப்பது வழக்கம்.

உடலில்; சீனியின் அளவு 70மூ இலிருந்து 110வரையிருக்க வேண்டும். பொதுவாக உணவு எடுக்கும் போது, எமது உடலில் தாழ்த்தும் வெள்ளம் (குளுக்கோஸ்) உருவாக்கப்படும். உணவு தவிர்க்கும் நேரத்தில் இரத்தத்தின் சீனித்தன்மையை சரியாக காட்டும்.

நீரிழிவு நோய் தொற்று நோய் போன்று பரவுதற்கு காரணம் இந்த நோய் குறித்து சரியான விழிப்புணர்வு இல்லாத தன்மையாகும்;. அத்துடன் நீரிழிவு நோயை முழுமையாக குணப்படுத்தலாம் என்ற சிந்தனையுமாகும்.  நீரிழிவு நோயை முற்றாக குணப்படுத்தலாம் என்ற தேவையற்ற விளம்பரங்களையும் குறிப்பிடலாம்.  ஆனாலும் நீரிழிவினை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் இந்நோயினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆரம்பத்தில் சீனியை கட்டுப்படுத்தாமல் நோய் முற்றியவுடனேயே அதிகமானவர்கள் வைத்தியரை நாடுகின்றனர்.

இந்நோயின் பாதிப்பினால் கால் இழப்பு, சிறுநீரக பாதிப்பு, கண்பார்வை இழப்பு மற்றும் பாலியல் செயற்பாடுகளில் தளர்வு போன்ற பிரச்சினைகளால் அவதிக்குள்ளாக வேண்டியிருக்கும். இதனால் குடும்பத்திற்குள்ளும் பலவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். நீரிழிவினால் இருதய பாதிப்பு மற்றும் பக்கவாதம் உருவாகக் கூடிய தன்மையும் உருவாகும்.

எனக்கு சீனி வியாதியில்லை, எனது குடும்பத்தில் யாருக்கும் இல்லை என்று கூறுவதைவிட,  உடலில் ஏதோ மற்றம் நிகழுமானால்  சீனியின் அளவை பரிசோதிக்க வேண்டும்.  நீரிழிவு நோய் பரம்பரைக் காரணிகளாலும்  ஏற்படலாம் அல்லது எமது வாழ்வியல் மாற்றம் உணவு மாற்றத்தினால் இந்நோய் உருவாகலாம்.

நீரிழிவு இனிப்பு பதார்த்தங்கள் உண்பதால் ஏற்படுகின்றதா என்று கேள்வி கேட்டால்   ஐரோப்பிய நாடுகளில் சொக்லேட் போன்ற உணவினை அதிகாக உண்கின்றனர். ஆனாலும் அவர்கள் நாளாந்தம் உடற்பயிற்சியையும் தவறாமல் மேற்கொள்கின்றனர். தமது உடல் சுகாதாரத்தையும் பேணுகின்றனர். நீரிழிவு குறித்து விழிப்புணர்வு  அவர்களுக்கு அதிகமாகவுள்ளது.

இன்சுலின் சுரப்பது குறைகின்றமையும்;, இன்சுலின் தொழிற்படாமையும், இன்சுலின் சுரப்பதற்கு ஏற்படும் தடையும் இவற்றுக்கு காரணமாகின்றன.

இனிப்பு பதார்த்தங்களை அதிகளவு உண்பதானது நோயத்; தாக்கம் உள்ளவர்களை முழுமையாக நேயாளிகளாக்குகின்றது. சிலருக்கு சீனி அதிகரிப்பதற்கான காரணம் அவர்களின் ஈரலில் உருவாக்கும் அதிகமான தாழ்த்தும் வெல்லமாகும். அத்துடன் சரீரத்திலுள்ள கொழுப்பு தட்டுகளும் கரைய ஆரம்பிக்கும். இதனாலேயே நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் மெலிவதை காணலாம். உடலில் சீனி குறையும் போது பலவீனமான நிலை உருவாகும். அதேநேரத்தில் ஈரல் சீனியை உற்பத்தி செய்து, உடலை  சீராக பாதுகாக்க உதவுகிறது.

குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு நீரிழிவு இருந்தால் முப்பத்தைந்து வயதாகும் போது நோய்குறித்து பரிசோதனை செய்ய வேண்டும். அல்லாவிடின் உடலில் பாதகமாக தன்மை அல்லது அதிகமாக கோபம்  உருவானாலும் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.

அதிகமான தாகம், அதிகமான சிறுநீர் கழித்தல், சரீரம் மெலிதல், பாரம் குறைதல் ஆகியவே நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும்;. அதுமாத்திரமல்ல ஆண்களின் ஆண் குறியில்; வெள்ளை நிறத்தில் பங்கஸ் உருவாகும். அதேநேரத்தில் பெண்களின் யோனியில் அதிகமான அரிப்புத்தன்மையுடன் செந்;நிறமாகி வெள்ளைப் படிவுகள் உருவாகும். இந்நிலையும்  நீரிழிவு  நோய்க்கான அறிகுறியாகும்.

உடலில் எண்ணெய் அதிகரிக்க அதிகரிக்க இன்சுலின் செயற்படமாட்டாது. இப்படியானவர்கள்  உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் நோயை கட்டுப்படுத்தலாம். அதிக எண்ணெய் உள்ள  உணவின் மூலம் ஈரலில் எண்ணெய் படிவு உருவாகும். ஈரலின் செயற்படும் தடைப்படும். இதனால் ஈரலின் செயற்பாடும் குறைவடைந்துவிடும்.

தொடர்ச்சியாக மெட்போர்மின் (அநவகழசஅin) எடுப்பதன் மூலம் சிறுநீரகம் பாதிக்கப்படுமா என்ற கேள்வி உருவாகிறது. சர்வதேச ரீதியில் மெட்போர்மின் நீரிழிவுக்கான தரமான மருந்தாகும். இம்மருந்தைப் பாவிக்கும்; போது உணவு கட்டுப்பாடு மூலம் சீனியின் தன்மையை பேண வேண்டும். சிலர் மெட்போர்மின் எடுத்துக் கொண்டே இனிப்பு பதார்த்தங்கள் குறித்து அசட்டையாக  இருப்பார்கள். இதனால் உடலில்; சீனி அதிகரித்து சிறுநீரகத்தையும் பாதிப்படையச் செய்யும். ஆனால் மெட்போர்மின் எடுத்ததாலேயே சிறுநீரகம் பாதிக்கப்பட்டது என்பது பிழையான கருத்தாகும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் மெட்போர்மினை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதை நீரிழிவு நோயாளர்கள் அறிந்திருக்க வேண்டும். மெட்போர்மின் பழயவள சரந என்ற தாவர வர்க்கத்திலிருந்தே தயாரிக்கப்படுகிறது. இதுவும் இயற்கையிலிருந்து எடுக்கப்படும்  தாவர வகையாகும்.

இன்சுலின் எடுப்பதற்கு அதிகமானவர்கள் பயப்படுவதற்கு காரணம் அது ஊசி மூலம் ஏற்றப்படுகின்றது என்பதாலாகும். நீரிழிவு பாதிப்புக்குள்ளாகும் கர்ப்பிணி தாய்மார்களும் கட்டாயம் இன்சுலின் எடுக்க வேண்டும். இன்று புதிய முறையிலான ஒரு பேனா வடிவில் இன்சுலின் வந்துள்ளது. இதனை எடுக்கும் போது பெரிதாக வலிக்காது. பிரச்சினையின்றி தாமே தமக்கு இன்சுலினை ஏற்றிக் கொள்ளலாம். இந்த இன்சுலின் ஊசி மிகவும் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளலாம்.

விசேடாக வாகனம் செலுத்தும் சாரதிகள் தங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பனை அறிந்திருப்பதில்லை. வாகனம் செலுத்தும் தங்களது கால்கள் மரத்து  வாகனத்தின் பிரேக் கிளேசை அழுத்தமுடியாமற் போகையில்த்தான் அதனை உணர்கின்றனர். இதனால் அதிகமான விபத்துக்கள் உருவாகுகின்றன. இதன் பின்னரே சாரதிக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியவருகிறது.  சாரதிகளுக்கும்  விழிப்புணர்வு இருக்க வேண்டும் சாரதிகளும் தங்களது இரத்தத்தை பரிசோதித்து  நீரிழிவு நோய் இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்.

அத்துடன் நோயாளிகளுடன் வைத்தியர்கள் பேசும் போது அவர்களின் மன அழுத்தத்தையும் அறிந்து அதற்கான மனநல ஆலோசனைகளை வழங்கும் போது நோயாளி நோயின் தன்மை குறைவதற்கு வழிவகுக்கும்.

நோயாளிகளும் தங்களின் மனபாரத்தை இறக்கி வைத்து குணப்படுத்த வழிவகுக்கும். அதிகமான நோயாளிகள் மனஅழுத்தத்தின் நிமித்தமே அதிகளவு நீரிழிவு தாக்கத்திற்குள்ளாகுகின்றனர்.

டொக்டர் நாமரத்ன அதிகமான நீரிழிவு நோயாளிகளை பராமரித்து, கால் பாதங்கள் பாதிக்கப்பட்டவர்களுடன்  கரிசனையுடன்  பேசி, அவர்களின் நோயின் தன்மையை அறிந்து, தனது வைத்திய சிகிச்சை மூலமாக கால்களை வெட்ட வேண்டும் என்று சூழ்நிலையில் இருப்பவர்களையும்  கால்களை இழக்காவண்ணம் மருத்துவ சிகிச்சை அளித்து, குணப்படுத்தியுள்ளமை நாளாந்த நிகழ்வாகும். 

போல் வில்சன்


Add new comment

Or log in with...