வடக்கு, கரையோர ரயில் சேவைகளில் நேர மாற்றம் | தினகரன்


வடக்கு, கரையோர ரயில் சேவைகளில் நேர மாற்றம்

வடக்கு மற்றும் கரையோர புகையிரத சேவைகள் சிலவற்றில் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் நேர மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசந்துறையிலிருந்து கொழும்பு, கோட்டை புகையிரத நிலையம் நோக்கிப் பயணிக்கும் தபால் புகையிரதம் மாலை 6.00 மணிக்கு காங்கேசந்துறையிலிருந்து புறப்படும். அப்புகையிரதம் கொழும்பு, கோட்டையிலிருந்து இரவு 9.00 மணிக்கு மீண்டும்  பயணத்தை ஆரம்பிக்குமென, புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை பெலிஅத்தவிலிருந்து மருதானை நோக்கிப் பயணிக்கும் புகையிரதமான நகர கடுகதி புகையிரதம், திருத்தப்பட்ட நேர அட்டவணையின்படி பெலிஅத்த புகையிரத நிலையத்திலிருந்து காலை 6.15 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும்.

அப்புகையிரதம் மாலை 3.00 மணிக்கு மருதானை புகையிரத நிலையத்திலிருந்து புறப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிற்பகல் 2.15 மணிக்கு பெலிஅத்தவிலிருந்து மருதானை வரை பயணிக்கும் காலி குமாரி புகையிரதமானது திருத்தியமைக்கப்பட்ட நேர அட்டவணையின்படி பிற்பகல் 1.35 மணிக்கு புறப்படுமெனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 


Add new comment

Or log in with...