முதலாவது சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை சாதனை | தினகரன்


முதலாவது சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை சாதனை

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பதுளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளது.

சிறுநீரக மாற்று சிகிச்சை வைத்திய நிபுணர் உதான ரட்னபால தலைமையிலான 13வைத்தியர்கள் இணைந்து நேற்று முன்தினம் நடைபெற்ற இம் மாற்று சத்திர சிகிச்சை பூரணமாக வெற்றியளித்துள்ளது.

பி.எய்ச்.எம்.இஸ்மத் என்ற 42வயதான சிறுநீரக நோயாளிக்கு சிறுநீரகங்கள் பழுதடைந்தமையினால் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறுநீரகமொன்றை நன்கொடையாக வழங்க எம். ரினாஸ் என்பவர் முன்வந்தார்.

இதற்கமைய மாற்று சிறுநீரக சத்திர சிகிச்சை  மேற்கொள்ளப்பட்டது.

பதுளை தினகரன் விசேட நிருபர்


Add new comment

Or log in with...