முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வு | தினகரன்

முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வு

புத்தளம் ஆனந்தா மாவத்தை ஜீவன திய தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் லிட்டில் ப்ளொக் முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வுகள் அண்மையில் முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ஜீவன திய தேவஸ்தானத்தின் போதகர்களான தேவகுமார் மற்றும் எக்ஸெல் ஆகியோரின் வழிகாட்டலில் முன்பள்ளி பொறுப்பாசிரியைகளான விக்னேஸ்வரி, ரேணுகா மற்றும் மதுஷானி ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த சிறுவர் சந்தை ஏற்பாடாகி இருந்தது. முன்பள்ளியில் கல்வி பயிலும் 50 மாணவர்கள் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டனர். முன்பள்ளிகளின் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் இந்த சிறுவர் சந்தையும் உட்படுத்தப்படுகின்றது.

முன்பள்ளி மாணவர்கள் மத்தியில் நேர்மையான கொடுக்கல் வாங்கல் பற்றிய தெளிவுகளை ஏற்படுத்தல், கணிதம் தொடர்பான ஆரம்ப அறிவினை புகுத்துதல் மற்றும் பழ வகைகள் மரக்கறி வகைகளை தெரிந்து கொள்ளல், சமூகத்தில் அச்சம் அற்ற பிள்ளைகளாக அவர்களை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு படிப்பினைகளை இத்தகைய சிறுவர் சந்தைகள் தோற்றுவிக்கின்றன.

இந்த சிறுவர் சந்தையின் ஆரம்ப நிகழ்வில் புத்தளம் நகரின் சக முன்பள்ளிகளின் ஆசிரியைகள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

புத்தளம் தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...