வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு 6 மாத காலத்துள் ரூ.16,650 மில். இலகு கடன் | தினகரன்


வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு 6 மாத காலத்துள் ரூ.16,650 மில். இலகு கடன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஆறு மாத காலத்துக்குள் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக 16,650 மில்லியன் ரூபா இலகு கடன் அடிப்படையில் வழங்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 'சஞ்சாரக்க பொட்டோ', 'ஜய இசுறு' உள்ளிட்ட 05 இலகு கடன் திட்டங்களை நிதியமைச்சு அறிமுகம் செய்ததுடன் இதன்கீழ் சுற்றுலாத்துறையைச் சார்ந்த 2,700 பேருக்கு 16, 650 மில்லியன் ரூபாவை இலகு கடன் அடிப்படையில் வழங்கியுள்ளதாகவும் நிதியமைச்சர் கூறினார்.

இக்கடன்களுக்காக மிகக்குறைந்த வீதத்தில் வட்டி அறவிடப்படும் அதேநேரம் ஹோட்டல்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்துக்கான கடன்களை அரசாங்கமே பொறுப்பேற்றதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இவற்றுக்கு மேலதிகமாக சுற்றுலாத்துறைக்கு அறவிடப்பட்டு வந்த 15 சதவீத வரி தற்போது 05 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

ஜயசிறி முனசிங்க


ஜயசிறி முனசிங்க

Add new comment

Or log in with...