Thursday, April 25, 2024
Home » Fazenda Smart Agro க்கு மெரிட் விருது வழங்கி கௌரவிப்பு

Fazenda Smart Agro க்கு மெரிட் விருது வழங்கி கௌரவிப்பு

by mahesh
February 14, 2024 1:02 pm 0 comment

விவசாய புத்தாக்கத்தை முன்னெடுக்கின்றமைக்காகவும் மதிநுட்பமான தீர்வை வடிவமைக்கின்றமைக்காகவும் The Embryo Innovation Center இன் Fazenda Smart Agro க்கு மெரிட் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெருமைக்குரிய தேசிய ICT விருதுகள் NBQSA 2023 (National Best Quality ICT Awards) நிகழ்வில் தொழிற்துறை விவசாய பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார். தகவல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

இந்த நிகழ்வில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறை மற்றும் தொழில்நுட்பத் துறையின் பிரமுகர்கள், நிறைவேற்று குழு அங்கத்தவர்கள், கடந்த கால தவிசாளர்கள் மற்றும் BCS Chartered Institute for IT – இலங்கை பிரிவின் இதர அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நிறுவனசார் சந்தைக்காக வடிவமைக்கப்பட்ட, விவசாயத் துறைக்கான புத்தாக்கமான தீர்வாக அமைந்துள்ள SLT-MOBITEL’இன் Fazenda Smart Agro க்கு மெரிட் விருது வழங்கப்பட்டிருந்தது. விவசாய சந்தைப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அடுத்த தலைமுறை மேம்படுத்தல்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது.

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநர் எனும் வகையில், SLT-MOBITEL இனால் தொடர்ச்சியாக இலங்கையின் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT