பிணை நிபந்தனை மீறிய சிசிர குமார எம்.பி.யின் வி.மறியல் நீடிப்பு | தினகரன்


பிணை நிபந்தனை மீறிய சிசிர குமார எம்.பி.யின் வி.மறியல் நீடிப்பு

ஜ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமாரவை எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிமன்றம் நேற்று உத்திரவிட்டது.

2004ஆம் ஆண்டு சிலாபத்தில் துப்பாக்கி ,வெடிபொருள் என்பவற்றை தன்வசம் சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எனினும் இவருக்கு 2011மார்ச் மாதம் பிணை வழங்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு இவருக்கு பணிக்கப்பட்டிருந்தது. இதனை மீறியதாக இவர் கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இவரை நீதிமன்றம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்தது.

குடிவரவு குடியகல்வு அறிக்கை மற்றும் சிலாபம் பொலிஸாரின் அறிக்கை என்பவற்றை சமர்ப்பிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மேற்படி வழக்கு விசாரணை தொடர்பில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு நீதிமன்ற வளாகத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. (பா)


Add new comment

Or log in with...