பாழடைந்த கிணற்றில் பல்வேறு வெடிபொருட்கள் மீட்பு | தினகரன்

பாழடைந்த கிணற்றில் பல்வேறு வெடிபொருட்கள் மீட்பு

 
சாவகச்சேரியிலுள்ள சரசாலை பிரதேசத்தின் கனகம்புளி சந்திக்கு அருகாமையில் உள்ள  பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து  வெடிபொருட்கள் சில  மீட்கப்பட்டுள்ளன.
 
கடந்த வெள்ளிக்கிழமை (10) நண்பகல் வேளையில் கிணற்றினை துப்பரவு செய்யும் போது  இவ்வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.
 
 
இதனை அடுத்து, குறித்த கிணறு முழுமையாக தற்போது இறைக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக அங்கு கிடந்த ஆயுதங்களை பொலிஸார் தரப்படுத்தியுள்ளனர்
 
 
இதன் போது   கைக்குண்டுகள் - 34 , ஆர்.பி.ஜி - 10 மிதிவெடி - 01 மோட்டார் குண்டு - 01 என்பன மீட்கப்பட்டுள்ளன.
 
குறித்த வீட்டில் ஆரம்ப காலத்தில் இராணுவம்   நிலைகொண்டிருந்த நிலையில்  தற்போது  அக்கிணற்றினை துப்பரவு செய்யும் போதே  இந்த வெடிபொருட்கள்  மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
 
 
இச்சம்பவம் தொடர்பில் தற்போது   சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 
(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)
 
 

Add new comment

Or log in with...