7 வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம்

ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை 7வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது. அரசியல் கட்சிகள் சார்பில் 4 வேட்பாளர்களும் சுயேச்சை குழுக்கள் சார்பில் 3வேட்பாளர்களும் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இதன் படி முதலில் முன்னாள் எம்.பி ஜயந்த கெட்டகொட சுயேச்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தினார். இது தவிர சுயேச்சையாக போட்டியிட சிறிபால அமரசிங்க மற்றும் அபரெக்கே புஞ்ஞானந்த தேரர் ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தினர்.

இலங்கை சோஷலிச கட்சி சார்பில் அஜந்தா விஜேசிங்க, அபே ஜனபல கட்சி சார்பில் பிரசன்ன பெரேரா, பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனநாயக ஜக்கிய தேசிய முன்னணி சார்பில் ஆரியவங்ச திசாநாயக்க ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். நவம்பர் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளதோடு ஒக்டோபர் 7 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.(பா)


Add new comment

Or log in with...