Friday, March 29, 2024
Home » விலையேற்றத்துக்கேற்ப வருமானமும் அதிகரிக்கும் காலம் விரைவில் வரும்

விலையேற்றத்துக்கேற்ப வருமானமும் அதிகரிக்கும் காலம் விரைவில் வரும்

by damith
February 6, 2024 7:20 am 0 comment

பொருட்களின் விலையேற்றத்திற்கு ஏற்றவாறு பொதுமக்களின் வருமானம் அதிகரிக்குமென, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மக்கள் பொறுமையாக இருந்தால் நிம்மதி தரும் மாற்றம் அவர்களுக்கு கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலே, மத்திய வங்கி ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து கருத்து வெளியிட்ட மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் குறிப்பிடுகையில்,

பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதற்கு ஏற்ற வகையில் நாட்டு மக்களின் வருமானம் இன்னும் அதிகரிக்கவில்லை.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் நிலையிலேயே,இவ்வேதனைகளை உணர நேரிடுகிறது.இந்நிலைமைகள் ஓரளவுக்கு இலகு படுத்தப்பட்டுள்ளதே தவிர, முழுமையாகக் குறைந்துவிடவில்லை.

இதன் நேர்மறையான பிரதிபலன்கள் கிடைப்பதற்கு சில காலம் எடுக்கும். பணவீக்கம் ஆறு வீதமாகக் குறைந்த போதிலும், பொருளாதாரம் ஆறு வீதத்துக்கு இன்னும் வளர்ச்சியடையவில்லை.

மக்களின் வருமானம், பொருட்களின் விலை ஏற்றத்துக்கு ஏற்ற வகையில் அதிகரிக்க வேண்டும். அதற்கு சில காலம் எடுக்கும். அதன் பின்னரே பொருட்களின் விலையேற்றத்திற்கு ஏற்றவாறான வருமானம் மக்களுக்கு கிடைக்கும்.

கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு இயல்புநிலை ஏற்பட அவகாசம் தேவை. இன்னும் அந்நிலைக்கு நாம்,வரவில்லை. இதே பாதையில் பயணிக்க வேண்டுமானால் இந்தப் பாதையில்தான் செல்ல வேண்டும். மாறினால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும்.

வலி மிகுந்ததாக இருந்தாலும், முடிவுகள் நீண்ட காலம் நீடிக்கும். இதற்கு சிறிது காலம் எடுக்கும். மக்கள் பொறுமையாக இருந்தால் அந்த நிம்மதி அவர்களுக்குக் கிடைக்கும்.இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளான நாடுகள் பல ஆண்டுகள் கடந்தும் இன்னமும் அதிலிருந்து மீளவில்லை. நாம் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குள் மீட்சிப் பாதையில் பயணித்துள்ளோம். இந்நிலையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT