வாக்காளர் இடாப்பு திருத்த கால அவகாசம் 19 உடன் நிறைவு | தினகரன்

வாக்காளர் இடாப்பு திருத்த கால அவகாசம் 19 உடன் நிறைவு

2019ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ள மற்றும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 19ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதால் அனைவரது பெயர்களையும் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. 

2019ஆம் ஆண்டு வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் தொடர்பிலான வாக்காளர் இடாப்புகள் கிராம சேவகர் பிரிவுகள், பிரதேச செயலகங்கள், அரசாங்க அதிபர் காரியாலயங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் தொடர்பிலான கணக்கெடுப்பு இறுதிப்படுத்தப்பட்ட வாக்காளர் இடாப்புகளே கிராம சேவகர் பிரிவுகளில் கடந்த மாதம் 23ஆம் திகதி முதல் எதிர்வரும் 19ஆம் திகதிவரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

 குறிப்பிட்ட காலப்பகுதியில் தமது பெயர்கள் வாக்காளர் இடாப்பில் உள்ளனவா என அனைவரும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.  பெயர்கள்  இல்லாவிடின் அல்லது குழப்பகரமாக இருந்தால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமது குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் சரியாக உள்ளனவா எனவும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான முறைப்பாடுகளை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் சமர்ப்பிக்க முடியும். அல்லது மின்அஞ்சல் மூலமும் இவற்றை சமர்ப்பிக்க முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

சுப்பிரமணியம் நிஷாந்தன்  


Add new comment

Or log in with...