Thursday, March 28, 2024
Home » பொத்துவில் பிரதேசத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

பொத்துவில் பிரதேசத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

by damith
January 30, 2024 11:29 am 0 comment

பொத்துவில் பிரதேசத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் அதற்கான சிகிச்சையை பெற்றுக் கொள்ளுமாறும். பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி ஏ.யூ.அப்துல் ஸமட் அறிவித்துள்ளார்.

பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட சில பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுள்ளார். குறிப்பாக விவசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் உப உணவுப்பயிர்ச் செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு இந்நோய் அதிகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

விவசாயிகள் தத்தமது பொதுச் சுகாதார பரிசோதகர்களுடன் தொடர்பு கொண்டு நோய் தடுப்பு தொடர்பான மாத்திரைகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

எலிக்காய்ச்சலினால் அடையாளம் காணப்பட்டுள்ளவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவதோடு, விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கொதித்தாறிய நீரை பருகுமாறும் கேட்டுள்ளார்.

காய்ச்சல், தசைகளில் கடுமையான வலி, கண் விழி சிவப்பு நிறமடைதல், சிறுநீர் வெளியேற்றம் குறைவடைதல், சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல் இந்நோயின் அறிகுறிகளாகும்.

(ஒலுவில் விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT