உவர்மலை இராணுவ முகாமிற்கு அருகில் மோட்டார் கைக்குண்டு மீட்பு | தினகரன்

உவர்மலை இராணுவ முகாமிற்கு அருகில் மோட்டார் கைக்குண்டு மீட்பு

உவர்மலை இராணுவ முகாமிற்கு அருகில் மோட்டார் கைக்குண்டு மீட்பு-Mortar Bomb Found at Uvarmalai Trincomalee

திருகோணமலை, உவர்மலை மத்திய வீதி இராணுவ முகாமிற்கு அருகில் மோட்டார் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (08) பிற்பகல் நபரொருவர் வழங்கிய தகவலையடுத்து குறித்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.

உவர்மலை - மத்திய வீதி இராணுவ முகாமுக்கு அருகில் தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றில் மாடுகளை வளர்க்கும் பகுதியில் மண் கொட்டப்பட்ட இடமொன்றில் மோட்டார் கைக்கொண்டு காணப்படுவதாக திருவண்ணாமலை தலைமை பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

குறித்த மோட்டார் கைக்குண்டை வெடிக்க வைப்பதற்காக திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்கவிடம் அனுமதியை பெற்றுள்ளதாகவும் இதனையடுத்து சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினரிடம் நீதிமன்றம் வழங்கிய அறிக்கையை ஒப்படைக்கவுள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் கைக்குண்டை செயழிலக்க செய்யும் நடவடிக்கையை விஷேட பொலிஸ் அதிரடி படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...