உயர் தரம் எழுதச் சென்ற ரஞ்சன் ராமநாயக்க

உயர் தரம் எழுதச் சென்ற ரஞ்சன் ராமநாயக்க-Ranjan Ramanayake Sit for AL

சட்டத்தரணி ஆவதே நோக்கம்

இன்று (05) ஆரம்பமான கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தர பரீட்சையில் தோற்றுவதற்காக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (05) பரீட்சை நிலையத்திற்கு சமூகமளித்திருந்தார்.

இன்று ஆரம்பமான பரீட்சைக்கு, கோட்டே ஆனந்த பாலிகா வித்தியாலயத்திற்கு தனிப்பட்ட விண்ணப்பதாரியாக தோற்றிய அவர், கிறிஸ்தவ பாட பரீட்சைக்கு தோற்றுவதற்காக அங்கு சமூகமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய பாடங்களாக அரசியல் மற்றும் ஊடக பாட பரீட்சைகளுக்கும் அவர் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1981 இல் முதன் முறை க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றிய அவர், 38 வருடங்களின் பின்னர் மீண்டும் உயர் தர பரீட்சைக்கு தோற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக அவர் தனிப்பட்ட ஆசிரியரிடம் பயின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் உயர் தர பரீட்சையின் முதலாவது அமர்வில் ஒரேயொரு பாடத்தில் மாத்திரம் சித்தியடைந்ததாக தெரிவித்திருந்ததோடு, இம்முறை பரீட்சையில் சித்தியடைந்தால் தான் ஒரு சட்டத்தரணியாக வர விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.


Add new comment

Or log in with...