சூரிய சக்தியால் இயங்கும் வீட்டு திட்ட ஒப்பந்தம் கைச்சாத்து

சூரிய சக்தியால் இயங்கும் வீட்டு திட்ட ஒப்பந்தம் கைச்சாத்து-PUCSL signs MoU with University of Moratuwa-self-powered housing model

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இயற்கை சக்தியால் சுயமாக இயங்கும் வீட்டு மாதிரியை அறிமுகப்படுத்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கையின் பொது பயன்பாட்டு ஆணைக்குழு மொறட்டுவைை பல்கலைக்கழகத்துடன் கையெழுத்திட்டது.

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சாலிய மெத்திவ் மற்றும் மொறட்டுவை பல்கலைக் கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் கே.கே.சி.கே. பெரேரா ஆகியோருக்கிடையில் இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த நிகழ்வானது கடந்த திங்கட்கிழமை (15) மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அதிகபட்ச இயற்கை ஒளி கிடைக்கின்றது. இந்த ஒளியை சேமிக்கும் அதேநேரம் வீட்டு பாவனைக்கு அதனை பயன்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.வீட்டுக்கான சிறந்த கட்டடக்கலை அமைப்பதன் மூலமாக இலவசமாக கிடைக்கும் சூரிய ஒளியைக் கொண்டு வீடொன்றின் அன்றாட தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளமுடியும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

"சக்திவளங்களின் பாதுகாப்பு, சேமிப்பு என்பது, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சட்டத்த்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்திசெய்யவும், மின் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டுகளில் ஒழுங்குறுத்தல் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்."

"அதன் ஒரு கட்டமாகவே  இத்தகைய ஒரு திட்டத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோமென"  இலங்கை பொதுப் பயன்பாடுகள் தலைவர் சாலிய மெத்திவ் தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் கே.கே.சி.கே. பெரேரா குறிப்பிடுகையில்,  நாட்டில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மின் மற்றும் எரிசக்தி தேவை முறைகளை அடையாளம் காணவும், கிராமப்புற, மலையக மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான மாதிரி வீட்டுக்குகளை அறிமுகம் செய்யவும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது ஒரு ஒரு கூட்டு ஆராய்ச்சி. இலங்கையின் மின் மற்றும் எரிசக்தி துறையில் ஒழுங்குறுத்துகை செய்யும் நிறுவனமான இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படவுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.

நாங்கள் ஆர்வமாக உள்ளோம், இது மொறட்டுவை பல்கலைக்கழக ஒத்துழைப்புக்கு கிடைத்த ஒரு மரியாதை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது உண்மையில் எங்களுக்கு ஒரு முக்கியமான மைல்கல்.

கிராமப்புற, மலையக மற்றும் நகர்ப்புறங்களில் குறைந்த வருமானம் கொண்ட மின் மற்றும் எரிசக்தி பயன்பாடு முறைகளை அடையாளம் காணும் பொருட்டு முதற்கட்டமாக  மொனராகலை, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் 300-350 வீடுகளின் மாதிரியை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

"இந்த முயற்சியானது 2030 ஆண்டுக்குள் 16% வீதமுள்ள பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தை 4% குறைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.  தேசிய பங்களிப்புக்கு முக்கயமானதுடன், இது ஆற்றல் திறன் மற்றும் இயற்கை சூழல் மாறுதல் பற்றிய விழிப்புணர்வு என்பவற்றை மக்கள் மத்தியில் ஊக்குவிக்க உதவுகிறது.

மேலும் இலங்கையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிடையே இயற்கை பாதுகாப்பு தொடர்பான சிறந்த வரவேற்பையும் பெரும் எனபதால் சந்தேகமில்லை என பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

இந்த செயல்திட்டமானது 2019 ஆம் ஆண்டின் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் திட்டமிடப்பட்ட செயல்திட்டத்துக்கு அமைவாக இரண்டு வருடங்களுக்கு முன்மொழியப்பட்ட ஒன்றாகும்.


Add new comment

Or log in with...