ஞானசாரரின் விடுதலை: எக்னலிகொடவின் மனைவி வழக்குத் தாக்கல்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பை ரத்து செய்யக் கோரி, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துகொள்ள உச்சநீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது. 

உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழுவே நேற்று இந்த வழக்கை செப்டம்பர் 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தது. 

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதிபதி பிரசன்ன ஜயவர்தன மற்றும் நீதிபதி எல்.டி.பி தெஹிதெனிய ஆகியோரே ​நேற்று இத்தீர்மானத்தை அறிவித்தனர். 

சந்தியா எக்னலிகொட தாக்கல் செய்துள்ள மனுவில் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை அரசியலமைப்பின் 12(1) சரத்துக்கு முரணானது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

ஞானசார தேரருக்கு ஆறு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தபோதும் கடந்த மே 23 ஆம் திகதியன்று அவர் பொது மன்னிப்பின்கீழ் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   


Add new comment

Or log in with...