Saturday, April 27, 2019 - 6:33pm
CID யிடம் ஒப்படைப்பு
தீவிரவாத தாக்குதல்களுக்கு தலைமை வகித்த மொஹம்மட் ஸஹ்ரான் என்பவரின் சாரதியை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
'கபூர்' என அழைக்கப்படும் மொஹம்மட் ஷரீப் ஆதம்லெப்பை (53) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
குறித்த நபர், காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து, காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, ருவன் குணசேகர தெரிவித்தார்.
Add new comment