ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படுவோரின் விபரங்களை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீ.ஐ.டியினர்,பொது மக்களின் உதவிகளையும் நாடியுள்ளனர். இவர்களின் இருப்பிடங்கள் பற்றித் தெரிந்தோர், 071-8591771 மற்றும் 011-2422176 அல்லது 011-2395605 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு தெரிவிக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-> மொஹம்மட் சாதிக் அப்துல்ஹக்
-> பாத்திமா லதீபா
-> புலஸ்தினி ராஜேந்திரன் எனும் சாரா
-> மொஹம்மட் சஹீத் அப்துல்ஹக்
-> மொஹம்மட் காசிம் மொஹம்மட் ரில்வான்
-> அப்துல் காதர் பாத்திமா காதியா
ஆகியோரின் விபரங்களையே பொலிஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோரியுள்ளது.
071-8591771
011-2422176
011-2395605
Add new comment