இலங்கை-பிரித்தானிய வர்த்தகத்தில் 'பிரெக்ஸிட்' ஏற்படுத்தக்கூடிய தாக்கம் | தினகரன்

இலங்கை-பிரித்தானிய வர்த்தகத்தில் 'பிரெக்ஸிட்' ஏற்படுத்தக்கூடிய தாக்கம்

இலங்கையின் பிரதான வர்த்தக பங்காளிகளில் பிரிட்டனும் ஒன்று. இலங்கையின் மொத்த வருடாந்த வர்த்தகத்தில் 10சதவீதத்துக்கு மேல் பிரிட்டனுடனான வர்த்தகம் அமைகிறது. அதேநேரம் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம் கடந்த 18வருடங்களாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு முன்னுரிமை சந்தை வாய்ப்பு முறையில் இடம்பெறும் GSP+ திட்டம் இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக செயற்படுகளை மேலும் மேம்படுத்தும் சாத்தியத்துக்கு வழி வகுக்கிறது. எவ்வாறெனினும் பிரெக்ஸிட் அறிமுகம் இலங்கைக்கு புதிய அக்கறையை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவேஇதனைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதன் மூலம் பிரிட்டனுக்கான தற்போதைய முன்னுரிமை சந்தையை பாதுகாத்துக்கொள்ளவும் தொடர்ந்து பேணவும் முடியும்.

இலங்கை கிட்டத்தட்ட 3பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதிகளை ஐரோப்பிய யூனியனுக்கு அனுப்புகிறது. இதில் 19சதவீத ஏற்றுமதிகள் பிரிட்டனுக்குச் செல்கின்றன. 2018இல் இது சுமார் 1பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. ஐரோப்பிய யூனியனின் ஏனைய அங்கத்தவ நாடுகள் பொருளாதார ரீதியில் பலமாக இருந்தபோதிலும் பிரிட்டன் இலங்கையிடம் இருந்து வாங்கும் பொருட்களைவிட குறைவாகவே வாங்குகின்றன.

தைத்த அடைகளே அதிக அளவில் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேநேரம் பிரிட்டனுக்கு வேறு பொருட்கள் அனுப்பவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

தற்போதைய ஐரோப்பிய யூனியனின் முறைமையான முன்னுரிமைகளுக்கான பொது ஒழுங்குமுறை ஊடாகவே இலங்கை தற்போது ஐரோப்பிய யூனியனின் சந்தையை அணுகியுள்ளது. இந்த ஒழுங்குமுறை 2014ஜனவரி முதலாம் திகதி முதல் 10வருட காலத்துக்கு அமுலில் உள்ளது எதிர்வரும் டிசம்பர் 31 2023இல் அது காலாவதியாகிறது. இந்த முறையானது அதன் பயனாளி நாடுகளில் அதிகரித்த ஏற்றுமதி வருமானத்தை ஏற்படுத்தி அதனூடாக பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. 01.01.2014முதல் GSP முறையின் கீழ் இலங்கை பயன்பெற்றது. அதனையடுத்து ஐரோப்பிய யுனியனின் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் சிறந்த ஆளுமை (GSP+) முறையின் கீழ் இலங்கை 2017மே 19முதல் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கட்டத்தின் ஐரோப்பிய யூனியனில் இருந்து வர்த்தக பேரத்துடன் அல்லது அது இல்லாத நிலையில் விலக நேர்ந்தால் EU – GSP+ முறையின் கீழ் இலங்கை தற்போது அனுபவித்து வரும் தற்போதைய சந்தையில் மாற்றங்கள் ஏற்படலாம்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளக்கு வரி மற்றும் வரிச் சலுகை மூலம் பிரிட்டன் நீண்டகாலமாக வர்த்தக மற்றும் அபிவிருத்திக்கு சாத்தியமான கொள்கைகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில் மார்ச் 2019க்கு பின்னர் பிரிட்டன் EU – GSP+ முறையை முற்றாக நிறுத்திவிடும் என்று நிச்சயமாக கூறலாம். தற்போதைய ஐரோப்பிய யூனியனின் EU - GSP முறை பிரிட்டன் தனது சொந்த முன்னுரிமை வர்த்தக முறைகளை ஏற்படுத்திக்கொள்ளும் வரை தொடரும்.

பிரிட்டனுடன் இலங்கை தற்போது சாதகமான மற்றும் அதிகரித்து வரும் வர்த்தகச் செயற்பாடுகள் மூலம் பயன்பெறுகிறது.

எனவே GSP+ சலுகைகளை மேலும் சில காலத்துக்கு இலங்கை அனுபவிக்க வேண்டியது முக்கியமாகும் இன்னும் சில வருடங்களில் இலங்கை உலக வங்கியின் மேல் ஒரு வருமானம் பெறும் நாடாக மாறக்கூடும்.

 எனவே தற்போதைய நிலையில் இருந்து மாறுவதற்கு இலங்கைக்கு சில ஆண்டுகள் எடுக்கலாம் எனவே பிரிட்டிஷ் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உயர் மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பேச்சுவார்த்தை மூலம் பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரி மற்றும் வரிச் சலுகை ஊடாக இலங்கை பயன்பெறுவது உறுதிப்படுத்த வேண்டும்.

இந்தக் கட்டத்தில் பிரிட்டன் வர்த்தக பேரத்துடன் அல்லது வர்த்தக பேரங்கள் எதுவும் இல்லாமல் ஐரோப்பிய யூனியனை விட்டு விலகினால் பிரிட்டனுடனான இலங்கையின் வர்த்தகம் உறுதிப்படுத்துவது தவிர்க்க முடியாததாக இருக்கும்.

எனவே பிரெக்ஸிட் நிலைமையை ஆராய்ச்சிப் புலனாய்வு அலகு (RIV) லண்டனிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து கண்காணித்து வருகிறது.


Add new comment

Or log in with...