Home » கோல்ஃப் சம்பியன்ஷிப் தொடர்களுக்கு தனது ஆதரவை தொடரும் Prima

கோல்ஃப் சம்பியன்ஷிப் தொடர்களுக்கு தனது ஆதரவை தொடரும் Prima

by Rizwan Segu Mohideen
December 7, 2023 11:44 am 0 comment

கோல்ஃப் விளையாட்டில் இளம் திறமைகளை வளர்ப்பதில் அதன் அர்ப்பணிப்புக்கு ஒரு சிறந்த சான்றாக, முன்னணி ஊட்டச்சத்து நிறுவனமான ப்ரீமா மீண்டும் 15ஆவது ஆண்டாக ஜூனியர் கோல்ஃப் திட்டத்திற்கு நிதியுதவி வழங்க முன்வருகிறது. ஜூனியர் கோல்ப் விளையாட்டை ஊக்குவிப்பதில் ப்ரிமாவின் முக்கிய பங்கு, ஒரு செழிப்பான கோல்ப் சமூகத்திற்கு வழி வகுத்துள்ளது, வரவிருக்கும் இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சாம்பியன்ஷிப் 2023 இலங்கையில் இருந்து மட்டுமல்லாது வளர்ந்து வரும் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக வெளிநாட்டில் இருந்தும் 10 இற்கும் மேற்பட்ட அணிகள் பங்கு கொள்ள இருக்கின்றன.

போட்டியானது ரோயல் கொழும்பு கோல்ஃப் கிளப் (RCGC) மைதானத்தில் டிசம்பர் 20 முதல் 22 வரை நடைபெறவுள்ளதுடன், டிசம்பர் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் இளைஞர்களுக்கான பயிற்சி சுற்றுகள் நடைபெறும்;. டீ ஆஃப் (Tee off )காலை 8 மணிக்கு நடைபெறும்; என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை ஜூனியர் ஓபன் என்பது இளம் கோல்ப் வீரர்களுக்கான உலக அமெச்சூர் கோல்ஃப் தரவரிசையில் (றுயுபுசு) நிறுவப்பட்ட அளவுகோலாகும். இலங்கை ஜூனியர் ஓபன் போட்டியில் வெற்றி பெறும் வீரர், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தேசிய ஜூனியர் சாம்பியனாக மகுடம் சூடுவார்.

“இலங்கையில் ஜூனியர் கோல்ப்க்கு ஆதரவளிக்கும் நீண்டகால பங்காளர் என்ற வகையில், இந்த ஆண்டு மீண்டும் ஜூனியர் ஓபன் கோல்ஃப் போட்டிக்கு அனுசரணை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். நாட்டில் இளம் மற்றும் வரவிருக்கும் கோல்ப் வீரர்களுக்கான மிக முக்கியமான போட்டியாக, இந்த ஆண்டும் சில உயர் தரமான கோல்ப் போட்டியை எதிர்பார்க்கின்றோம். இலங்கை கோல்ஃப் போட்டியை மீண்டும் ஒருமுறை நடத்துவதற்கும், கோல்ஃப் விளையாட்டை தொடர்ந்து வளப்படுத்துவதற்கும் நாங்கள் அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கின்றோம்,” என இலங்கையின் ப்ரீமா குழுமத்தின் சிலோன் அக்றோ இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பொது முகாமையாளர் சஜித் குணரத்ன தெரிவித்தார்.

ப்ரிமாவுடன் கடந்த 15 வருடங்களாக நாம் கொண்டிருந்த ஆதரவு மற்றும் கூட்டாண்மைக்கு இலங்கை கோல்ஃப் மிகவும் கடைமைப்பட்டுள்ளது. இது நமது தேசிய கோல்ஃப் நாட்காட்டியில் தெளிவாக ஒரு ‘ப்ரீமா’ நிகழ்வாகும், இது ஜூனியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது” என இலங்கை கோல்ஃப் இன் தலைவர் ரணில் பீரிஸ் கூறினார்.

இலங்கையில் ஜூனியர் கோல்ஃப் நிலப்பரப்பை வடிவமைப்பதில் ப்ரீமாவின் ஆதரவு ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இலங்கை கோல்ப் விளையாட்டில் அவர்களின் தொடர்ச்சியான ஈடுபாடு இளம் திறமையான ரஷான் அல்கம, கயா தளுவத்த, ஆதித்ய வீரசிங்க, ஜெவான் சதாசிவம், குமார் தனுஷன், வினுதா வீரசிங்க, ரதிஸ் காந்த் சகோதரர்கள் மற்றும் ஷெரின் பாலசூரிய போன்ற ஒரு சிலரை இளைஞர்கள் மத்தியில் முன்மாதிரியாக திகழ்வதற்காக
இத்துறையில் தங்களின் திறன்களை வெளிப்படுத்துவதற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

அனுசரணை நிதி ஆதரவை வழங்குவதோடு மட்டுமல்லாமல் விளையாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் தொழில்முறைக்கு பங்களித்துள்ளது. ப்ரீமா சன்ரைஸ் பிறெட் உடனான நீண்டகால கூட்டாண்மை மூலம், பிராந்திய ஜூனியர் ஓபன்களை உருவாக்கும் செயற்திட்டத்தில் இலங்கையின் பிற பகுதிகளுக்கு போட்டியை கொண்டு செல்ல முடிந்தது. இளம் வீரர்கள் உலக தரவரிசைப் புள்ளிகளைப் பெறுவதற்கு இந்த ஆண்டு அவற்றை மூன்று நாள் நிகழ்வுகளாக நடாத்துவோம்”, என ஜூனியர் டெவலப்மென்ட் கமிட்டி, இலங்கை கோல்ஃப் இன் தலைவர் நிலூ ஜயதிலக அவர்கள் கூறினார்.

இந்த சாம்பியன்ஷிப் இளம் திறமைகள், சர்வதேச தோழமை மற்றும் கடந்த 15 ஆண்டுகளில் விளையாட்டிற்கு ப்ரீமா வழங்கிய அசைக்க முடியாத ஆதரவின் வெளிப்பாடாக உள்ளது.

இந்த போட்டியின் முதன்மை அனுசரணையாளரான Pசiஅய ளுரசெளைந டீசநயன, நிகழ்வின் போது வீரர்களுக்கு எப்போதும் ஊட்டச்சத்தினை வழங்குவர். பரிசளிப்பு விழா டிசம்பர் 22ஆம் தேதி மாலை 3.00 மணிக்கு நடைபெறும்.

வயது அடிப்படையில் பிரிவு வகைகள்

  • திறந்த/தங்கப் பிரிவு (ஆண்கள் மற்றும் பெண்கள், 15 முதல் 18 வயது வரை)
  • வெள்ளிப் பிரிவு (13 முதல் 14 வயது வரை)
  • வெண்கலப் பிரிவு (ஆண்கள் மற்றும் பெண்கள், 11 முதல் 12 வயது வரை)
  • செப்புப் பிரிவு (வயது பிரிவு 10 வயது மற்றும் கீழ்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT