கைது செய்யப்பட்ட விஜயகலா எம்.பி. பிணையில் விடுதலை (UPDATE) | தினகரன்

கைது செய்யப்பட்ட விஜயகலா எம்.பி. பிணையில் விடுதலை (UPDATE)

கைது செய்யப்பட்ட விஜயகலா எம்.பி. பிணையில் விடுதலை (UPDATE)-Vijayakala Maheswaran Released on bail

 

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை  பொலிஸ் திட்டமிட்ட குற்ற பிரிவினால்  கைது செய்யப்பட்ட அவர்,  கொழும்பு கோட்டை நீதவான் அரங்க திஸாநாயக்க முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது,  பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனை ரூபா  5 இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.


விஜயகலா எம்.பி. கைது (10.17am)

முன்னாள் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக,  இன்று காலை  திட்டமிட்ட குற்றப் பிரிவில்  முன்னிலையாகியிருந்த அவர்,  இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளதாக கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்  ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக வேண்டும், என்பது தொடர்பிலான கருத்துகளை பரப்பியதாக தெரிவித்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 02 ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலாமகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் விடுதலைப்புலிகள் காலத்தில் இடம்பெறவில்லை என்றும், பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாயின் விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டுமென்ற கருத்துப்படவும் உரையாற்றியிருந்தார்.

இந்த உரைக்கு தென் பகுதியில் பல சர்ச்சைகள், எதிர்ப்புகள் கிளம்பியதால், கடந்த ஜூலை 05 ஆம் திகதி தனது அமைச்சுப் பதவியை அவர் இராஜினாமா செய்திருந்தார்.

 


Add new comment

Or log in with...