உலகுடன் போட்டியிடுவதற்கு இலங்கை தயங்க வேண்டியதில்லை | தினகரன்

உலகுடன் போட்டியிடுவதற்கு இலங்கை தயங்க வேண்டியதில்லை

ஜிஎஸ்பி+ இழப்பு பற்றி முழுமையான பகுப்பாய்வு வழங்குவது கடினம் என்றாலும், ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் எவ்வாறு இலங்கையின் போட்டியாளர்கள் பங்குபெற்றார்கள் என்பதை நோக்குமிடத்து ஆசிய ஆடை உற்பத்தியாளர்களிடம் இலங்கை எவ்வாறு தோல்வியடைந்தது என்பது பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தை அளிக்கின்றது.

சர்வதேச வர்த்தக மையத்தின் அடிப்படையில் , 2009 ஆம் ஆண்டில் வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளினால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஏற்றுமதிகள் முறையே 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், 1.09 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், இலங்கையின் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு எதிராகவும் இருந்தது.

எவ்வாறாயினும், 2015 க்குள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதிகள் வியட்நாம் நாட்டின் ஏற்றுமதி 3.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், பாகிஸ்தானின் ஏற்றுமதி 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் மற்றும் கம்போடியாவின் ஏற்றுமதி 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் உயர்ந்துள்ளதுடன், இலங்கையின் ஏற்றுமதி வெறும்2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மட்டுமேஉள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP பிளஸ் வசதியானது இலங்கைக்கு மீள்கொண்டுவரப்பட்டு ஐரோப்பிய ஒன்றியத்தினால் 2017 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டது. முக்கியமாக, இது இலங்கைக்கு, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடனும் மற்றும் முன்னுரிமை சந்தை அணுகலை அனுபவிக்கும் பல ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளுடனும் போட்டியிடும் களத்தை அமைத்துக் கொடுக்கும்.

வெவ்வேறு துறைகளில் இருந்து பெறப்படும் மேலதிக சலுகைகள் ஒன்றுக்கொன்று மாறுபடும். - பல் வகையான ஆடை துறைகளில் வரி 9.6% சதவீதத்திலிருந்து பூச்சியம் வரையும்,கடல் உணவுத் துறையில் 18.5 சதவீதத்திலிருந்து பூச்சியம் வரையும், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறித் துறையில் 12.5 சதவீதத்திலிருந்து பூச்சியத்திற்கும் , பீங்கான் மற்றும் மட்பாண்டத் தயாரிப்புப் பிரிவுகளில் 8.4 சதவீதத்திலிருந்து பூச்சியம் வரையும் விளையாட்டுப் பொருட்கள் துறையில் 1.2 சதவிகிதத்திலிருந்து பூச்சியத்திற்கும் அறவிடப்படுகின்றது.

GSP+ மனித வள மற்றும் உழைப்பாளர் உரிமைகள், நிலையான அபிவிருத்தி மற்றும் நல்ல ஆட்சி என 27முக்கிய சர்வதேச மரபுகளை நிலைநிறுத்த உறுதிப்பாடு அளித்துவரும் வளரும் நாடுகளுக்கு வெகுமதி எனும் பெயரில் ஏற்றுமதிப் பொருட்களுக்கு குறைந்தளவு வரிகளை வழங்கி ஊக்கத்தை வழங்கி வருகின்றது.பின்னர் இந்த நாடானது பின்வரும் இரண்டு நிலைமைகளின் கீழ் 'பாதிக்கப்படக் கூடியது' எனக் கருதப்பட வேண்டும். - ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் போட்டியிட முடியாத நாடாக இருத்தல் வேண்டும் ( இறக்குமதி வீதமானது ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த GSP இறக்குமதிகளில் 6.5 சதவீதத்திற்கும் குறைவானதாக இருத்தல் வேண்டும் ) மற்றும் நாட்டின் பல்வகைப்பட்ட ஏற்றுமதிக்கான அடித்தளமற்ற நாடாக இருத்தல் வேண்டும். (ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மொத்த நாட்டின் GSP இறக்குமதிகளில் 75 சதவீதத்திற்கும் மேலாக கொண்ட ஏழு தயாரிப்புகள்).

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மிகப் பெரிய ஏற்றுமதி ஆடை உற்பத்திகளாகும். GSP+ கீழ்தோற்றம் பற்றிய விதிகளின் அடிப்படையில் ஆடைக்கான துணிகள் இலங்கையில் இருந்து அல்லது GSP பெற தகுதி பெறும் பிராந்திய தொகையில் இருந்து பெறப்பட்டதாக இருத்தல் வேண்டும். சீனா போன்ற நாடுகளிலிருந்து பெறப்படும் துணிகளை விட இலங்கையின் ஆடைத் தொழிற்சாலைகளில் இருந்து பெறப்படும் துணிகளுக்கு கேள்வி அதிகம்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மற்றும் ஆளுமைச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எந்தவொரு எதிர்ப்பையும் ஐரோப்பிய ஒன்றியத்தால் எடுத்துக்காட்டாது இருக்குமிடத்தும் மற்றும் அவ்வப்போது வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய மதிப்பீடுகளின் அடிப்படையிலும் (முதலாவது வெளியீடு ஒரு வருடத்திற்குள்) GSP+ சலுகைக்கு இலங்கை தொடர்ந்தும் தகுதியுடையதாக இருக்கும். இருந்தாலும், மேல் நடுத்தர-வருமான பொருளாதாரத்தின் நிலைக்கு இலங்கை முன்னேறுமிடத்தும் (உலக வங்கியால் வகைப்படுத்தப்பட்டுள்ளது) , தொடர்ந்து மூன்று வருடங்களாக அந்த நிலையை தக்க வைத்து கொள்ளுமிடத்தும் ,GSP+ சலுகையை மேலும் பெறுவதற்கு தகுதியற்றதாகின்றது(தயவு காலப்பகுதி இரண்டு வருடங்களாலும்).எனவே, 2023 வரை GSP+ பயன்களை பெற முடியும்.

GSP ஐ திரும்பப் பெற்று 12 மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி11% ஆக உயர்ந்துள்ளது.

ஏறக்குறைய ஏற்றுமதியின் 60% ஆடை விற்பனையாகும். இது 8% ஆக வளர்ச்சியடைந்துள்ளது.

ஆடைத் துறைகளின் வளர்ச்சியானது 1-2% வருவாயைக் கடந்து விட்டது. அத்துடன் எளிமையான வாடிக்கையாளர்களுடனான விலையிடல் நன்மைக்கு வழிகாட்டுகின்றது.

கடந்த 2 மாத ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துணியை தவிர்த்து ஆடைத் துறையின் வேலைவாய்ப்பு அதிகரிப்பு பற்றிய மதிப்பீடு குறைந்தபட்சம் 7,500 ஆகும்.

ஏற்கனவே ஏற்றுமதியில் $ 150m அதிகரித்துள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட$ 500 மில்லியன் இலக்கின் ஆடை உற்பத்தியின் 1/3 அதிகமானதாகும்.

பிற குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடைய துறைகள் மீன்பிடி மற்றும் டயர்கள் ஆகும்.

மீன் தொடர்பான தடை நீக்கம் மற்றும் GSP+ - வியாபார இணைப்புகள் மீட்டெடுக்கப்பட்டதிலிருந்தும் ஏற்றுமதிகளில் மீன்வகையின் அளவு உண்மையில் இருமடங்காகி விட்டது.

இறப்பர் டயர்கள் மற்றும் கையுறைகளின் வளர்ச்சியானது மதிப்பை விட குறைவாக உள்ளது. இது விலை உயர்வு மற்றும் வலுப்படுத்தும் யூரோ ஆகியவற்றின் நன்மைகளை பரிந்துரைக்கின்றது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் முக்கியமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் தாயாரித்து பரிமாறப்படும் உணவுகள் உட்பட ஜேர்மனிக்கும் பிரான்ஸிற்குமிடையில் குறைவான சேவைகளை காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளன.

முன்னணி ஆடை ஏற்றுமதியாளரான பிரண்டிஸ் குரூப் குழுவின் நிதி இயக்குனரான ஹசிதா பிரேமரத்ன, "ஆடைத் துறையானது ஒரு முழுமையான வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கின்றது. GSP+ சலுகையினால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (பிரண்டிஸ், மாஸ் , ஹிட்ரமணி) போன்ற மூன்று முக்கிய ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்லாது மற்றைய சிறிய நடுத்தர நிறுவனங்கள், டீஜெய் மற்றும் ஹேய்லீஸ் பப்ரிக் போன்ற உள்ளூர் ஆடை உற்பத்தியாளர்கள்,மதிப்பீட்டு சங்கிலியில் உள்ள மற்ற பங்கேற்பாளர்களான (டிரிம் சப்ளையர்கள், பேக்கேஜிங், லாஜிஸ்டிக்ஸ்) போன்றோருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தால் நன்மைகள் பெற செய்வதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" எனக் குறிப்பிட்டார்.

உயர்தர உற்பத்திகளை உற்பத்தி செய்தல் மற்றும் ஒழுங்குநெறிகளை பின்பற்றுவது இலங்கையின் முக்கிய பலமாக மாறும்.மேலும், இலங்கையின் நிறுவனங்கள் படிப்படியாக நிலையான உற்பத்திகள், பச்சை உற்பத்தி, சேதன உற்பத்திகள்,மற்றும் உலகளாவிய ரீதியிலும் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தால் மதிக்கப்படுகின்ற நியாயமான வர்த்தக நடைமுறைகள் போன்றவற்றை பின்பற்றி உற்பத்தி செய்து வருகின்றன.அடிப்படை மனித உரிமைகள், சட்ட விதிமுறை மற்றும் நல்ல ஆட்சி ஆகியவற்றை மதித்து ஐரோப்பிய ஒன்றிய சந்தையை ஊடுருவக் கூடிய திறன் வாய்ந்த ஒரு வலுவான நாடானது சர்வதேச முதலீட்டாளர் சமூகத்திற்கு ஒரு வலுவான சமிக்ஞையை அனுப்புவதன் மூலமும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஈர்ப்பை பெற எளிதாக்கின்றது.

GSP + திட்டம் இலங்கையில் அதிகமதிகமான வலுமதிப்பீட்டை ஊக்குவிப்பதோடு அதன் மூலம் பின்தங்கிய ஒருங்கிணைப்பையும் ஊக்குவிக்கிறது. இதன் விளைவாக புதிய தொழிற்சாலைகளை அமைப்பதற்கும், நாட்டில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இது உதவுகிறது.

GSP-+ நன்மைகள் இலங்கையின் கிராமப்புற தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும். GSP+ இன் கீழ் வழங்கப்படும் சலுகைகள் இலங்கையின் விவசாய மற்றும் மீன்பிடித் தொழில்களில் ஈடுபட்டுள்ள நிதி ரீதியாக குறைந்த சலுகையை பெரும் விவசாயிகளுக்கு உதவுகின்றது. புதிய ஏற்றுமதி வாய்ப்புகள் இறுதியில் வாழ்வாதாரங்களை அபிவிருத்தி செய்து விவசாயிகளின் வருமான அளவுகளை உயர்த்தக் கூடியது.

இலங்கை ஏற்றுமதியாளர்கள், வேளாண்மை சார்ந்த பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை ஐரோப்பிய கூட்டு நிறுவனங்களுடன் இணைந்த கூட்டு முயற்சிகள் மற்றும் தொழில்நுட்பத்தை மாற்றுவதன் மூலம் உச்ச பயன்பாட்டை பெற்றுக் கொள்ள முடியும். சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களின் மதிப்பு சங்கிலிகளின் பகுதியாக இன்னும் திறம்பட வேலை செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும்.

வேலைப்பளுவை இரட்டிப்பாக்குவதன் மூலமும் உற்பத்தி செயல்முறைகளைத் தன்னியக்கப்படுத்துவதன் மூலமும் அதிகளவான உற்பத்தி திறன் பற்றிய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் உற்பத்தியாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதேநேரம், கடல் மீன் ஏற்றுமதியாளர்கள் புதிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கையின் ஆழ்கடலில் வாழும் மீன்களில் கவனிக்கத்தக்க குறைவானது நடுத்தர மற்றும் நீண்ட கால திறனை அச்சுறுத்தும் என்று வலியுறுத்துகின்றனர்.

ஏற்றுமதிகளில் மூன்றில் ஒரு பங்கு இங்கிலாந்தின் சந்தையாகும்.வரவிருக்கும் பிரெக்ஸிட் (Brexit) கருத்தில் கொண்டு, இந்த முக்கிய பிராந்தியத்தில் முன்னுரிமை சந்தை அணுகலை பராமரிக்க ஒரு பொறிமுறையை நிறுவுவது பற்றி அறிந்திருத்தல் வேண்டும்.

திருமதி மல்வத்தே , EDP யின் தலைவரது கருத்துப்படி, "GSP பிளஸ் மீண்டும் பெறப்பட்டதன் பின்னர் 12 மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நாம் ஏற்றுமதி செய்யப்பட்ட ஏற்றுமதி வளர்ச்சியை அனுபவித்திருந்த போதிலும், புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.மேலும் ஏற்றுமதி விரிவாக்கத்தை எளிதாக்கவும் மத்திய ஐரோப்பிய சந்தைகளில் ஊடுருவதற்கும் கவனம் செலுத்த வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச வர்த்தக மையத்தின் ஆதரவுடன் புதிய தேசிய ஏற்றுமதி மூலோபாயம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​மின்னணு, ஒளி பொறியியல் தயாரிப்புகள், மின் பொருட்கள், ஆரோக்கிய தயாரிப்புகள் மற்றும் சில வேளாண்மை பொருட்கள் போன்ற புதிய புதுமையான தயாரிப்புக்கள் , ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்குள் வரியற்ற முறையில் விருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது".

வர்த்தக ஒப்பந்தங்களின் நன்மைகள்:

2017ஆம் ஆண்டில் இலங்கை 15.1 பில்லியன் டொலர்களை ஏற்றுமதி செய்துள்ளதுடன், இந்த ஆண்டு 17.4 பில்லியன் டொலர்களாகவும் அதிகரித்துள்ளது. இது வெளிநாட்டு முதலீட்டிற்கான ஒரு சாதனை ஆண்டாகும். சென்ற ஆண்டில் அந்நிய நேரடி முதலீடானது 1.9 பில்லியன் டொலர் தொகையை எட்டியதுடன் மற்றும் 2018 ஆம் ஆண்டில் 2.5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும், மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவான புள்ளிவிவரங்களாகும். உதாரணமாக, சிங்கப்பூரில் வருடாந்த ஏற்றுமதிகள் 480 பில்லியன் டொலர்கள், தாய்வான் 340 பில்லியன் டொலர்கள், தாய்லாந்தில் 254 பில்லியன் டொலர்கள், வியட்நாம் 250 பில்லியன் டொலர்கள், மலேசியாவில் 230 பில்லியன் டொலர்கள் ஆகும்.பங்களாதேஷ், சர்வதேச வர்த்தக களத்திற்கு மிகவும் காலதாமதமாக நுழைந்தாலும் தற்போது 41 பில்லியன் டொலர்களை கொண்ட வர்த்தகமாகும்.இந்த நாடுகளால் பெறப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடானது சிங்கப்பூருக்கு 77 பில்லியன் டொலர்கள், வியட்னாமிற்கு 12 பில்லியன் டொலர்கள், தாய்வானுக்கு 9 பில்லியன் டொலர்கள், தாய்லாந்துக்கு ஐந்து பில்லியன் டொலர்களாகும் .

இந்த நாடுகள் அனைத்தும் FTA கள், வர்த்தக தாராளமயமாக்கல், மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்தல் போன்றவற்றையே மையமாகக் கொண்டு இந்த நிலைக்குச் சென்றுள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் தங்கள் பொருளாதாரத்தை வளர்த்து இன்னும் நல்ல வேலை வாய்ப்புக்களை கொண்டுவந்து மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.

இலங்கை இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்பது மிகத் தெளிவான விடயம்.21 மில்லியனுடைய சந்தையை மட்டும் கவனம் செலுத்தினால் நமக்கு தேவையான விரைவான பொருளாதார வளர்ச்சியை ஒருபோதும் நாம்மால் அடைந்து விட முடியாது.நமது ஒரேயொரு தேர்வு உலகளாவிய சந்தைகளுடன் ஒருங்கிணைத்தல் ஆகும் மற்றும் இது FTA களுக்கான முதன்மை காரணங்களில் ஒன்றாகும்.புதிய சந்தைகளில் நுழைந்து புதிய முதலீட்டிற்கும் தேவைப்படும் முதலீடுகளை கொண்டு வருவதன் மூலமும் அதனுடன் சேர்த்து புதிய தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்வதன் மூலமும் நாமும் உலகில் சிறந்த போட்டிகளில் பங்கேற்க முடியும்.

நாம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் வெளிநாட்டு முதலீட்டை ஆதரிக்க வேண்டும்.அத்துடன், இந்த ஆண்டு தொடக்கத்தில் சிங்கப்பூருடன் FTA ஐ நிறைவேற்றியுள்ளோம், நாங்கள் சீனாவுடன் FTA பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்கூட்டிய கட்டங்களில் உள்ளோம்.

மேலும் நமது தற்போது இந்தியாவுடன் உள்ள FTA ஐ பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) மூலம் விரிவுபடுத்தவுள்ளோம்.

ETCA வின் மூலம் இலங்கையின் தொழில்துறை ஏற்றுமதிகளில் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் மற்றும் இந்தியாவிற்கு சந்தை அணுகலை சிறப்பான முறையில் பயன்படுத்தவும் நமது வினத்திறனை அதிகரிக்கவும் முடியும். அத்துடன், இந்திய சந்தையில் நிலுவையல்லாத கட்டண தடைகளையும் மேலும் ஏற்கனவே உள்ள நடைமுறை தடைகள் மற்றும் இந்திய நுழைவாயில்களில் தாமதங்கள், குறிப்பாக பரஸ்பர அங்கீகரிக்கப்பட்ட உடன்படிக்கைகள் மூலம் தாமதங்கள் போன்றவற்றையும் ETCA பேச்சுவார்த்தைகளின் போது முன்வைக்கப்படுள்ளது. சீனாவுடனான FTA மற்றும் இந்தியாவுடனான ETCA ஆகியவை இணைந்து 2 பில்லியன் மக்களுடைய சந்தையையும் ஐரோப்பிய ஒன்றியத்தை விடவும் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தையும் இலங்கைக்கு வழங்கும்.

இலங்கையின் அரசாங்கமானது மற்ற காலத்தில் ஏற்படும் வர்த்தக தடைகள் பற்றி அறிந்திருப்பதனால், உள்ளூர் தொழிற்துறை வல்லுநர்களுக்கு இயந்திரங்களை மேம்படுத்தவும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும் வர்த்தக குறியீட்டுப் பொதி வழங்குவதை நாம் கவனித்து வருகின்றோம். இதன் மூலம் இந்தத் தொழில்கள் மிகவும் போட்டிமிக்கதாகவும், உள்ளூர் சந்தை மற்றும் பிராந்திய மற்றும் உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடியதாகவும் இருக்கும்.

இலங்கை என்பது வியாபார மையம் எனும் நோக்கத்தின் கீழ் அரசாங்கமானது இலங்கையில் வியாபாரத்தை எளிதாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. மற்றைய நாடுகளும் முன்னேறிச் செல்கின்றன என்பதையும் கருத்தில் கொண்டு 2020 ஆம் ஆண்டளவில் உலக வங்கியின் வியாபார குறியீட்டு திசையில் வர்த்தக குறியீட்டு எண்ணில் 40 இடங்களை எட்டிப் பிடிப்பதற்கு நாங்கள் இலக்கை கொண்டுள்ளோம்.உலக வங்கியுடன் சேர்ந்து தேவையற்ற ஒழுங்குமுறை மற்றும் நடைமுறை தடைகள் அகற்றுவதற்கான ஒரு வழிகாட்டி வரைபடத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம கருத்து தெரிவிக்கையில், "தொடங்குவதற்கு முன்னரே எம்மால் போட்டியிட முடியாது எனக் கூறும் அனைவரும் இலங்கைக்கு பெரும் அநீதி இழைக்கின்றனர்.உலகோடு போட்டியிட நாம் ஏன் பயப்பட வேண்டும்? எம்மிடம் உள்ள சில ஏற்றுமதியாளர்களை எடுத்து நோக்குவோமானால்- எங்கள் ரப்பர் டயர்கள் உலகின் சிறந்த விமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன. எங்கள் அறுவை சிகிச்சை கையுறைகள் உலகின் சிறந்த அறுவை சிகிச்சையாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன. நமது மின்னணு உணரிகள் உலகின் சிறந்த கார் பிராண்ட்களில் பயன்படுத்தப்படுகின்றன. எமது ஆடைகளை உலகின் மிக உயர்மட்ட விளையாட்டு வீரர்கள் அணிந்து வருகிறார்கள். பெரிய பிராண்ட்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்றன, மேலும் எமது தகவல் தொழில்நுட்பம் உலகின் முன்னணி பங்குச் சந்தைகளால் பயன்படுத்தப்படுகிறது. GSP பிளஸை மீண்டும் பெறுவதில் அவர்கள் எப்படி முதலீடு செய்துள்ளார்கள் என்பதை எங்கள் நிறுவனங்கள் எடுத்து காட்டுகின்றன.


Add new comment

Or log in with...