Thursday, June 14, 2018 - 10:54am
பசறை நகரிலுள்ள வர்த்தகநிலையமொன்றில் இன்று (14) அதிகாலை ஏற்பட்ட தீயில் பெண்கள் மூவர் பலியாகியுள்ளனர்.
குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் தாய், சகோதரி மற்றும் சிற்றன்னை என பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு பலியானோர், வர்த்தக நிலைய உரிமையாளரின் தாயான கே.பி. மல்லிகா (62) அவரது சிற்றன்னை (61), அவரது சகோதரி ரி.எச். கல்பனா (23) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர்.
பிரேதங்கள் பசறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
பசறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Add new comment